Andru Bharathi Sonna |
---|
பாடலாசிரியர் : புலமைபித்தன்
பாரத பூமி பழம்பெரும் பூமி நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்
அன்று பாரதி சொன்ன வார்த்தைகளெல்லாம் பழசா போச்சு வெறுங்கதையாச்சு நீ பிறந்த மண்ணில் இன்று உனக்கே இடமில்லை இந்த நிலைமைதான் இன்னும் மாறாதோ ஒரு விடிவெள்ளி இங்கே தோன்றாதோ
அன்று பாரதி சொன்ன வார்த்தைகளெல்லாம் பழசா போச்சு வெறுங்கதையாச்சு நீ பிறந்த மண்ணில் இன்று உனக்கே இடமில்லை இந்த நிலைமைதான் இன்னும் மாறாதோ ஒரு விடிவெள்ளி இங்கே தோன்றாதோ
பசித்தவன் குடிசையிலே பழங்கஞ்சி கிடையாது படைத்தவன் மாளிகையில் பாலும் சோறும் குறையாது பசித்தவன் குடிசையிலே பழங்கஞ்சி கிடையாது படைத்தவன் மாளிகையில் பாலும் சோறும் குறையாது
இளைத்தவன் ஏழையென்றால் இருப்பவன் தரமாட்டான் இளைத்தவன் ஏழையென்றால் இருப்பவன் தரமாட்டான் தேனாறு பாயும் அங்கே பல வயிறுகள் காயும் இங்கே
அன்று பாரதி சொன்ன வார்த்தைகளெல்லாம் பழசா போச்சு வெறுங்கதையாச்சு நீ பிறந்த மண்ணில் இன்று உனக்கே இடமில்லை இந்த நிலைமைதான் இன்னும் மாறாதோ ஒரு விடிவெள்ளி இங்கே தோன்றாதோ
கட்ட ஒரு நல்லத் துணி கடையில் வாங்க வழியேது பட்டுச் சட்டை சிரிக்கிறது பாவி மனம் கொதிக்கிறது கட்ட ஒரு நல்லத் துணி கடையில் வாங்க வழியேது பட்டுச் சட்டை சிரிக்கிறது பாவி மனம் கொதிக்கிறது
கொட்டு மழை வெய்யிலுக்கெல்லாம் கூரையிலே வாசலுண்டு கொட்டு மழை வெய்யிலுக்கெல்லாம் கூரையிலே வாசலுண்டு ஒட்டிய உடம்பு அதிலே எத்தனை தழும்பு
அன்று பாரதி சொன்ன வார்த்தைகளெல்லாம் பழசா போச்சு வெறுங்கதையாச்சு நீ பிறந்த மண்ணில் இன்று உனக்கே இடமில்லை இந்த நிலைமைதான் இன்னும் மாறாதோ ஒரு விடிவெள்ளி இங்கே தோன்றாதோ
ஏழை விடும் கண்ணீரில் எரிமலைகள் உருவானால் ஏச்சு வாழும் கூட்டமெல்லாம் எங்கு சென்று இளைப்பாறும் ஏழை விடும் கண்ணீரில் எரிமலைகள் உருவானால் ஏச்சு வாழும் கூட்டமெல்லாம் எங்கு சென்று இளைப்பாறும்
கோழிக் கூட கழுகாய் மாறும் கொதித்தெழுந்தால் தாங்காது கோழிக் கூட கழுகாய் மாறும் கொதித்தெழுந்தால் தாங்காது சாது மிரண்டால் ஒரு சரித்திரம் தோன்றும்
அன்று பாரதி சொன்ன வார்த்தைகளெல்லாம் பழசா போச்சு வெறுங்கதையாச்சு நீ பிறந்த மண்ணில் இன்று உனக்கே இடமில்லை இந்த நிலைமைதான் இன்னும் மாறாதோ ஒரு விடிவெள்ளி இங்கே தோன்றாதோ இந்த நிலைமைதான் இன்னும் மாறாதோ ஒரு விடிவெள்ளி இங்கே தோன்றாதோ