Annachi Annachi

Annachi Annachi Song Lyrics In English

கும்மியடிக்கிற குட்டி இவ அம்மி மிதிக்க போறாளாம் அம்மி மிதிக்க போறாளாம் களையெடுத்த கன்னி இவ கழுத்த நீட்டப் போறாளாம் கழுத்த நீட்டப் போறாளாம்

அண்ணாச்சி அண்ணாச்சி மேளச் சத்தம் கேட்டாச்சு தங்கச்சி தங்கச்சி கல்யாண நாளாச்சு

ஆயிரங்காலத்து பயிருன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க ஆயிரம் அர்த்தம் அதுல உண்டு வாழ்ந்து பார்த்தா புரியுமுங்க

அண்ணாச்சி அண்ணாச்சி மேளச் சத்தம் கேட்டாச்சு தங்கச்சி தங்கச்சி கல்யாண நாளாச்சு

பொண்ணுக் காலில் மிஞ்சி போடுறோமே செஞ்சி புருஷனத்தான் மிஞ்சி நடக்கக்கூடாது வஞ்சி மொகத்துக்கழகா மஞ்சப் பூசு பொண்ணுக்கழகா அஞ்சி வாழு

பயிரக் காக்க வேலி அட பொண்ண காக்க தாலி பயிரக் காக்க வேலி அட பொண்ண காக்க தாலி அண்ணாச்சி அண்ணாச்சி மேளச் சத்தம் கேட்டாச்சு

பொறந்த வீட்ட தொறந்து புகுந்த வீடு வருவா புருஷனத்தான் தெய்வமுன்னு சொல்லிக்கிட்டு வாழ்வா உயிருக்கூட நீங்கதான்னு உன்ன நம்பி வருவா பொண்ணு இதனை நெனச்சுப் பார்த்து மூணு முடிச்சு போடு

அண்ணாச்சி அண்ணாச்சி கல்யாணம் ஆயாச்சு தங்கச்சி தங்கச்சி பந்தியும் போட்டாச்சு

ஆயிரங்காலத்து பயிருன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க ஆயிரம் அர்த்தம் அதுல உண்டு வாழ்ந்து பார்த்தா புரியுமுங்க

அண்ணாச்சி அண்ணாச்சி கல்யாணம் ஆயாச்சு தங்கச்சி தங்கச்சி பந்தியும் போட்டாச்சு