Annaiyaga Maarava |
---|
பாடலாசிரியர் : புலமைபித்தன்
ஹோஓஓஅன்னையாக மாறவா அள்ளி வைத்து பாடவா மனதிலே நீ இன்னும் குழந்தையே மடியிலே நீ தூங்கு மழலையே
ஹோஓஓஅன்னையாக மாறவா அள்ளி வைத்து பாடவா
நிழலாய் இங்கு நான் வந்தேன் நிஜமாய் இன்று வாழ்கின்றேன் இதயம் என்று ஒன்றை இன்று இங்கே நான் கண்டேன்
இன்று எந்தன் வானம் எங்கும் அன்பு மேகம் தந்தை கொண்ட நேசம் அன்னை கொண்ட பாசம்
ரெண்டும் ஒன்றாய் அய்யா உந்தன் கண்ணில் நான் கண்டேன்
ஹோஓஓஅன்னையாக மாறவா அள்ளி வைத்து பாடவா
இதுதான் எங்கள் தாய் வீடு என்றும் இங்கே என் வாழ்வு தனியே வந்தேன் உறவைக் கண்டேன் பேசும் கண்ணோடு
சொந்தம் என்ன வேண்டும் பந்தம் என்ன வேண்டும் இன்னும் ஜென்மம் ஏழும் இந்த அன்பு வேண்டும் இதுதான் உன்னை நானும் கேட்டேன் தந்தாய் அன்போடு
ஹோஓஓஅன்னையாக மாறவா அள்ளி வைத்து பாடவா மனதிலே நீ இன்னும் குழந்தையே மடியிலே நீ தூங்கு மழலையே லாலல்லாலா லாலலாலா ம்ம்ம்ம்