Annan Alla Thanthai |
---|
அண்ணன் அல்ல தந்தை என்றான் அண்ணி அல்ல அன்னை என்றான் பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா

பாவங்கள் செய்தாள் அங்கே பொல்லாத கைகேயி பழியெல்லாம் கண்டாள் இங்கே பூங்கோதை வைதேகி
விதியென்று எண்ணிக்கொண்டான் ரகுராமன் அந்நாளில் வெல்லாதோ தர்மம் என்றான் வென்றானே பின்னாளில் மீண்டும் ஒரு மன்னன் என தோன்றும் நிலைக் காணலாம்
அண்ணன் அல்ல தந்தை என்றான் அண்ணி அல்ல அன்னை என்றான் பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா
கட்டில் கொண்டு வந்தாயே தொட்டில் கொண்டு வந்தேனோ கொள்ளைச் செல்வம் தந்தாயே பிள்ளைச் செல்வம் தந்தேனோ

ஆனாலும் என்னை இங்கு தாலாட்ட செய்தாயே ஆனாலும் என்னை இங்கு தாலாட்ட செய்தாயே அன்பான தம்பிக்கென்னை தாயாக்கி வைத்தாயே
அண்ணன் அல்ல தந்தை என்றான் அண்ணி அல்ல அன்னை என்றான் பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா
தண்ணீரில் தீரும் தாகம் கண்ணீரில் தீராது பன்னீரில் ஆடும் பூவும் வெந்நீரில் ஆடாது
உன்னாலே வாழும் ஜீவன் தன்னாலே வாழாது ஒன்றல்ல ஜென்மம் கோடி நீயின்றி நானேது நீராகவும் பேராகவும் நான் கண்டது உன்னைத்தான்