Atha Maga Kaththirunthaa

Atha Maga Kaththirunthaa Song Lyrics In English


மற்றும் எல் ஆர் அஞ்சலி

அத்தமக காத்திருந்தா அத்தானுக்காக ஆறுவக பூவ முடிச்சு ஏ புள்ள அத்தானும் வந்திட்டாரு ஆவணி மாசம் யானை மேல ஊருவலம் வச்சி

அத்தமக காத்திருந்தா அத்தானுக்காக ஆறுவக பூவ முடிச்சு ஏ புள்ள அத்தானும் வந்திட்டாரு ஆவணி மாசம் யானை மேல ஊருவலம் வச்சி

காத்தடிக்குது மழை பொழியுது வீட்டுக்கதவு படபடக்குது காத்தடிக்குது மழை பொழியுது வீட்டுக்கதவு படபடக்குது ஆத்தாடி அவர்தானா

சாத்துனத தொறந்து வச்சு ஆத்திரமா வெளிய வந்தார் காத்து செஞ்ச தவறுதானா

சின்னக்குட்டி இடையவிட்டு சிவப்பு சேலை அகலுது வண்ணவண்ண வளையலெல்லாம் கைய விட்டு நழுவுது

தட்டிவிட்ட காத்து வந்து சரசமாடி தழுவுது தள்ளி தள்ளிப் பாக்குறாளே என்ன செய்ய முடியுது என்ன செய்ய முடியுது

அத்தமக காத்திருந்தா அத்தானுக்காக ஆறுவக பூவ முடிச்சு ஏ புள்ள அத்தானும் வந்திட்டாரு ஆவணி மாசம் யானை மேல ஊருவலம் வச்சி

ஹா பாலுமில்லை பள்ளியிலே நாலு நாளா உறக்கமில்ல பார்த்த பக்கம் நிக்குறாண்டி ஆலமரம் போலிருந்தா அருவம் புல்லு போல மெலிஞ்சா அப்படி சொக்குறாடி


தண்ணியிலே குளிக்கப்போனா தரையில் விழுந்து உருளுரா சந்தனத்த நினைச்சுகிட்டு குங்குமத்த தடவுறா

அந்தியிலே பொண்ணக்கூட ஆசையோட பாக்குறா அச்சமில்ல வெக்கமில்ல யாரு சொல்லி கேக்குறா யாரு சொல்லி கேக்குறா

அத்தமக காத்திருந்தா அத்தானுக்காக ஆறுவக பூவ முடிச்சு ஏ புள்ள ஆறுவக பூவ முடிச்சு

ஆன வந்தது சேன வந்தது போன மச்சான் திரும்பி வந்தது ஞானப் பொண்ணு கும்மி அடிச்சா ஆன வந்தது சேன வந்தது போன மச்சான் திரும்பி வந்தது ஞானப் பொண்ணு கும்மி அடிச்சா

நாளும் வந்தது கிழமை வந்தது மேளதாளம் கூட வந்தது தாலிக் கட்டி அம்மி மிதிச்சா

அர்த்தஜாம நேரத்திலே அழகு ரெண்டு இணையுது அந்த நேரம் என்னென்னவோ ஆனந்தத்தில் உளறுது வண்ணக்கிளி சேர்த்து சேர்த்து காளையோடு பேசுது சின்னப் பொண்ணு வெக்கத்தால சிவந்த வாய மூடுது சிவந்த வாய மூடுது

அத்தமக காத்திருந்தா அத்தானுக்காக ஆறுவக பூவ முடிச்சு ஏ புள்ள அத்தானும் வந்திட்டாரு ஆவணி மாசம் யானை மேல ஊருவலம் வச்சி யானை மேல ஊருவலம் வச்சி