Chinna Vizhi Jadhimalli |
---|
சின்ன விழி ஜாதிமல்லி தூக்கமா சொல்லு சின்னப் பொண்ணே கலங்காதே தேடி வரும் நலம் தானே
உன் பார்வை சந்திப்பாலே பூபாளம் பிறக்கும் நீ மீட்டும் ராகம் கேட்டு பூம்பாவை சிரிக்கும் வசந்தத்தில் விரிக்கின்ற பருவத்து சிறகு வானத்தில் துணை தேடி பறக்கின்ற நேரம் வானத்தில் துணை தேடி பறக்கின்ற நேரம்
பொன் வண்ணப் பூவே மெல்ல மடியினில் சாய்ந்து என்னென்ன பாடம் நெஞ்சில் எழுதுகின்றாளோ திருக்கோயில் வலம் வந்து விளக்கேற்றி வைத்தேன் சிரிக்கின்ற கண்ணில் ஜீவன் விளக்காக வேண்டும் சிரிக்கின்ற கண்ணில் ஜீவன் விளக்காக வேண்டும்
சின்ன விழி ஜாதிமல்லி தூக்கமா சொல்லு சின்னப் பொண்ணே கலங்காதே தேடி வரும் நலம் தானே ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ