Chinnachiru Vayathinile |
---|
சின்னஞ்சிறு வயதினிலே கள்ளமற்ற மனதினிலே காதல் என்னும் விதை விதைத்தாள் கன்னி ஒருத்தி சின்னஞ்சிறு வயதினிலே கள்ளமற்ற மனதினிலே காதல் என்னும் விதை விதைத்தாள் கன்னி ஒருத்தி
கனவா கதைகளா எதை நான் உரைப்பது கலந்து பழகினோம் விழிகளால் தழுவினோம்
சின்னஞ்சிறு வயதினிலே கள்ளமற்ற மனதினிலே காதல் என்னும் விதை விதைத்தாள் கன்னி ஒருத்தி இளங்காதல் என்னும் விதை விதைத்தாள் கன்னி ஒருத்தி
எனது வீட்டுப் பக்கம் தினமும் வருவாள் விழியை தூது விட்டு தனி வழி போவாள் தவிக்கும் ஆசை தன்னில் அவளை தொடவே என்ன தான் சேதி என்று அவளிடம் கேட்பேன்
நெடு நேரம் பேசிக் கொள்வோம் வாய் மொழி இல்லாது பசி தாகம் எல்லாம் நெஞ்சம் மறந்திடும் அப்போது அவள் பார்க்க நான் பார்க்க மனம் எங்கும் தேன் வார்க்க பகல் என்று பார்த்தோமா இரவென்று பார்த்தோமா கதை அல்ல கவிதை அகலாது நினைவை
சின்னஞ்சிறு வயதினிலே கள்ளமற்ற மனதினிலே காதல் என்னும் விதை விதைத்தாள் கன்னி ஒருத்தி
ஒரு நாள் மாலை என்னை தனியே அழைத்தாள் உயிரே நீ தான் என்று பனி மொழி சொன்னாள் இரு கை தோளில் இட்டு மெதுவாய்ச் சிரித்தாள் மடியில் மெல்ல வந்து மயிலெனச் சாய்ந்தாள்
எனை மீறி எந்தன் நெஞ்சம் அலைந்தது எங்கெங்கோ இள நெஞ்சின் ஆசை தன்னில் நடந்தது ஏதேதோ சுகம் தந்த பெண்ணாளே பரிசொன்று தந்தாளே வருவேன் நான் என்றாளே எனை நீங்கிச் சென்றாளே தவித்தேனே தனியே எனக்கேது துணையே