Dei

Dei Song Lyrics In English

பாடலாசிரியர் : இன்பராஜ் ராஜேந்திரன்

மாலை மங்கும் நேரத்தில் மானம் அற்றி போகுதா வாயில் அற்ற வாழ்க்கையில் வாழ்ந்து பார்க்க தோணுதா

மானம் கொண்ட ஜென்மமா வாழ்ந்த வாழ்க்க போதுமா மானம் ஈனம் ரோசம் எல்லாம் இன்னும் இங்க வேணுமா

டேய் நீயும் வேணா உன் லவ்வும் வேணா ஒரு கேட்டு போட்டு வாழ வந்த பூட்டு நானா

வாழ்க்கையே ஒரு வட்டம்தானா இது எழுதி வச்ச சட்டம்தானா அத எடுத்து கிழிச்சு திருத்த வந்த சத்தம் நானா நானா நானா நானா

நாள்கணக்கா ஒழைக்கிறேன் ராத்திரியில் முழிக்கிறேன் நீ குடிச்சு புட்டு வந்தாலும் குடுத்தனந்தா நடத்துறேன்

நீ சும்மா சுத்தி திரிஞ்சாலும் காதலதான் வளக்குறேன் உன்ன பொய் பெருமை பேசி பேசி ஊரு வாய அடைக்குறேன்

உன் தோளு மேல சாயத்தான் நானும் தினம் தவிக்குறேன் நீ தள்ளி தள்ளி போகும் போது எரிமலையா வெடிக்கிறேன்

கண்ணு மூடி தூங்கியும் கனவுக்குள்ள விழிக்கிறேன் நிழலுக்குள்ள மாட்டிக்கிட்டு நெஜத்த மட்டும் தேடுறேன்

போடா டேய் நீயும் வேணா உன் லவ்வும் வேணா ஒரு கேட்டு போட்டு வாழ வந்த பூட்டு நானா

வாழ்க்கையே ஒரு வட்டம்தானா இது எழுதி வச்ச சட்டம்தானா அத எடுத்து கிழிச்சு திருத்த வந்த சத்தம் நானா நானா நானா நானா

பூவுக்குள்ள புகுந்த தேனீ தேன விட்டு போகுமா போதைக்குள்ள விழுந்த நீயும் எழுந்துக்கதான் முடியுமா

பொம்பளையா பொறந்துபுட்டா பொத்தி பொத்தி போவுமா ஆடி பாடி ஆட்டம் போட ஆம்பளதான் வேணுமா

உலகு ரொம்ப பெரிசுடா அது உனக்கு மட்டும் சிறிசுடா உன் அச்சம் மடம் நாணம் எல்லாம் தூக்கி மூட்ட கட்டுடா

ஆளு ரொம்ப கிறுக்குடா என்ன கிறுக்கி தள்ளி இருக்குடா அத திருத்திக்கொள்ளும் நேரம் கொஞ்சம் திரும்பிடிச்சி இப்போடா