Dei Dei Payale |
---|
டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே உழைச்சாலே வருங்காலம் உருவாகும் உண்மையிலே
டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே உழைச்சாலே வருங்காலம் உருவாகும் உண்மையிலேஹே
நியாயம் மறந்து திரியிற மனுஷன நாய்கள் கூட மதிக்காது நாளும் உழைக்கிற ஜனங்கள மிதிச்சா சோறு தண்ணிக் கெடைக்காது
ஆமாண்ணே ஆமாண்ணே அதுக்கு மேலே சொல்லண்ணே ஆமாண்ணே ஆமாண்ணே அதுக்கு மேலே சொல்லண்ணே
பொதுவா எதுக்கும் சட்டமில்லே ஒழுங்கா நடக்கும் திட்டமில்லே
கலப்ப புடிச்சு உழுதவன் கட்டாந்தரையில் கிடக்குறான் வலுத்தவன் பொழைக்கிறான் உழைச்சவன் துடிக்கிறான்
டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே உழைச்சாலே வருங்காலம் உருவாகும் உண்மையிலே
டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே ஹேஹேய்
உடுத்த துணியில்ல பொழைக்கவும் வழியில்ல உறங்கி கிடந்தோம் ஊமைகளாய் எதிர்க்க துணிவில்லை தடுக்கவும் வழியில்ல எதுக்கு பொறந்தோம் அடிமைகளாய்
ஆமாண்ணே ஆமாண்ணே அதுக்கு மேலே சொல்லண்ணே ஆமாண்ணே ஆமாண்ணே அதுக்கு மேலே சொல்லண்ணே
விழுதா கெடந்தா நியாயமில்ல அழுதா எதுக்கும் நீதியில்ல
குனிய குனிய குட்டிடுவான் எழுந்து நின்னா விட்டுடுவான் எளச்சவன் துணியணும் எதுக்கு நீ பணியணும்
டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே உழைச்சாலே வருங்காலம் உருவாகும் உண்மையிலே
டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலேஹேய்