Devan Kovil Deepam |
---|
தேவன் கோயில் தீபம் அன்பு பிள்ளை தெய்வ கோலம் மலரைப் போலே பாருங்கள் உங்கள் மகனைப் போலே எண்ணுங்கள்
தேவன் கோயில் தீபம் அன்பு பிள்ளை தெய்வ கோலம் மலரைப் போலே பாருங்கள் உங்கள் மகனைப் போலே எண்ணுங்கள்
முத்துமணி பொன்வண்ணம் மோகரதம் இத்தனை பேர் கைப்பட்டால் என்னாகும் பண்பாடும் பூச்செண்டை பந்தாடலாமா பால்வண்ண பொம்மைகள் கை மாறலாமா
யார் வேண்டுமானாலும் சம்மதம் இப்பிள்ளையப் பாருங்கள் நாடக பாவைக்கு நாணமும் உண்டு வந்த பின் தாருங்கள் அழகு இளமை நடனம் ரசனை கலையென நினைத்துப் பாருங்கள்
தேவன் கோயில் தீபம் அன்பு பிள்ளை தெய்வ கோலம் மலரைப் போலே பாருங்கள் உங்கள் மகனைப் போலே எண்ணுங்கள்
சத்தியமே என் வாழ்வின் சாதனைகள் உத்தமர்க்கே எந்நாளும் சோதனைகள் சீதைக்கு வாராத துன்பங்கள் உண்டா இந்நாட்டில் இந்நாளில் சீதைகள் ஒன்றா
கற்புள்ள பெண்களின் கதைகளைத்தானே நானும் கேட்கின்றேன் கடவுளிடத்தில் போகின்றபோது கணக்கை சொல்கின்றேன் காதல் அன்பு கருணை இரக்கம் கடமைகள் என்றே வாழ்கின்றேன்
தேவன் கோயில் தீபம் அன்பு பிள்ளை தெய்வ கோலம் மலரைப் போலே பாருங்கள் உங்கள் மகனைப் போலே எண்ணுங்கள்