Deviyar Maanam |
---|
தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும் நாவினாற் சொல்வ தல்லால் கிளியே நம்புதலற்றாரடி
மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப் பேதைகள் போல் உயிரைக் கிளியே பேணி இருந்தாரடி
அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறு மதியும் உச்சத்திற் கொண்டாரடி கிளியே ஊமைச் சனங்களடி