Endro Pulavan Padiyathai |
---|
பாடலாசிரியர் : கண்ணதாசன்
நாராய் நாராய் செங்கால் நாராய் பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்
என்றோ புலவன் பாடியதை நான் இன்றே பாடுகிறேன் என்றோ புலவன் பாடியதை நான் இன்றே பாடுகிறேன்
என் வறுமையை போக்கும் அரசன் யாரோ அவனை தேடுகிறேன் அவனை தேடுகிறேன்
என்றோ புலவன் பாடியதை நான் இன்றே பாடுகிறேன்
கல்வி கண்களை திறந்தவன் பார்வை குருடாய் போனதம்மா பாசமாய் வளர்த்த மகளும் எனக்கே பாரமாய் ஆனதம்மா
அறிவை தந்த தெய்வம் எனக்கு ஆஸ்தியை தரவில்லை யாரிடம் கேட்பேன் யாரிடம் சொல்வேன் எனக்கே புரியவில்லை
என்றோ புலவன் பாடியதை நான் இன்றே பாடுகிறேன்
ஏணிப்படிகள் தானே என்றும் ஏறி போவதில்லை அதில் ஏறிப் போனவர் ஏணியை கொஞ்சம் பார்ப்பதில் தவறில்லை
பயிரை கொடுப்பது பூமியின் தர்மம் அதை நான் செய்கின்றேன் பூமியின் தாகம் தீர்க்க தண்ணீர் வேண்டும் கேட்கின்றேன் வேண்டும் கேட்கின்றேன்
என்றோ புலவன் பாடியதை நான் இன்றே பாடுகிறேன் இன்றே பாடுகின்றேன்