Ezhunthal Mella Ezhunthal

Ezhunthal Mella Ezhunthal Song Lyrics In English

எழுந்தாள் மெல்ல எழுந்தாள் சேலை சிறகால் விண்ணில் பறந்தாள் எழுந்தாள் மெல்ல எழுந்தாள் சேலை சிறகால் விண்ணில் பறந்தாள்

என்ன நடந்தது பெண்ணுக்குள்ளே தென்றல் அடிக்குது கண்ணுக்குள்ளே காதல் பாவை இந்த அதிகாலை நேரத்தில் பனி சிந்தும் ஈரத்தில்

எழுந்தாள் மெல்ல எழுந்தாள் சேலை சிறகால் விண்ணில் பறந்தாள்

ஏனிந்த மயக்கம் இன்று எவரை கேட்பதோ தேன் எங்கு இனிக்கும் என்று எறும்பை கேட்பதோ மெல்ல மெல்ல மேனியில் மின்னல் வந்து போகுதோ உள்ளே என்ன ஓசையோ ஓடை ஒன்று ஓடுதோ இடுப்பில் சரியும் சேலைப் போல் இதயம் நழுவுதோ

எழுந்தாள் மெல்ல எழுந்தாள் சேலை சிறகால் விண்ணில் பறந்தாள்

நான் இன்று விழித்துக் கொண்டே கனவு காண்கிறேன் ஓஓஓஅந்த பனித் துளிக்குள் உலகம் பார்க்கிறேன் காதல் வந்த பின்புதான் ஞானம் கொஞ்சம் வந்தது மௌனம் என்னும் வார்த்தைக்கு ஏதோ அர்த்தம் உள்ளது வானுக்கும் மண்ணுக்கும் ஊஞ்சல் கட்ட வசதி வந்தது

எழுந்தாள் மெல்ல எழுந்தாள் சேலை சிறகால் விண்ணில் பறந்தாள் எழுந்தாள் மெல்ல எழுந்தாள் சேலை சிறகால் விண்ணில் பறந்தாள்

என்ன நடந்தது பெண்ணுக்குள்ளே தென்றல் அடிக்குது கண்ணுக்குள்ளே காதல் பாவை இந்த அதிகாலை நேரத்தில் பனி சிந்தும் ஈரத்தில்

எழுந்தாள் மெல்ல எழுந்தாள் சேலை சிறகால் விண்ணில் பறந்தாள் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்