Geethai Solla Kannan |
---|
பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு
கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே கடமை சொல்ல ராமன் வந்தான் காவியத்திலே என்ன சொல்ல நீ பிறந்தாய் இந்த வீட்டிலே எடுத்துச் சொல்லடா ராஜா என்னிடத்திலே
கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே
தெய்வமில்லா ஆலயத்தில் விளக்கை ஏற்றினேன் இங்கு தேரில்லாமல் வடம் பிடிக்க ஊரைக் கூட்டினேன் தெய்வமில்லா ஆலயத்தில் விளக்கை ஏற்றினேன் இங்கு தேரில்லாமல் வடம் பிடிக்க ஊரைக் கூட்டினேன்
நன்றியில்லா மனிதரிடம் அன்பை நாடினேன் அது நஞ்சு என்று தெரிந்தபோது நெஞ்சம் வாடினேன் இதை சொல்ல வந்தாயோ என்னை வெல்ல வந்தாயோ
கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே
என் பிறப்பில் எப்படியோ கரை படிந்தது பலர் ஏளனமாய் சிரித்தபோது மனம் ஒடிந்தது வன்முறைகள் செய்திடவே துணிச்சல் வந்தது அந்த வரலாற்றை கடந்த காலம் எழுதுகின்றது இதை சொல்ல வந்தாயோ என்னை வெல்ல வந்தாயோ
கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே கடமை சொல்ல ராமன் வந்தான் காவியத்திலே என்ன சொல்ல நீ பிறந்தாய் இந்த வீட்டிலே எடுத்துச் சொல்லடா ராஜா என்னிடத்திலே
வேடிக்கையாய் உலகத்தை நீ பார்க்க வந்தாயோ எந்த வேண்டுதலை நிறைவேற்ற விரைந்து வந்தாயோ வேடிக்கையாய் உலகத்தை நீ பார்க்க வந்தாயோ எந்த வேண்டுதலை நிறைவேற்ற விரைந்து வந்தாயோ
உன் கதையை சொல்வதற்கு ஓடி வந்தாயோ இங்கு என் கதையை கேட்ட பின்பு அதை மறந்தாயோ என்ன சொல்ல வந்தாயோ என்னை வெல்ல வந்தாயோ
கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே கடமை சொல்ல ராமன் வந்தான் காவியத்திலே என்ன சொல்ல நீ பிறந்தாய் இந்த வீட்டிலே எடுத்துச் சொல்லடா ராஜா என்னிடத்திலே
கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே