Gnyapagam Irukkudha

Gnyapagam Irukkudha Song Lyrics In English


ஞாபகம் இருக்குதா ஞாபகம் இருக்குதா

ஞாபகம் இருக்குதா உன்னை காலை முதல் மாலை வரை காத்திருந்து பார்த்தது ஞாபகம் இருக்குதா

என்னை நித்தமொரு ஆடை போட்டு பார்க்க வந்து போனது ஞாபகம் இருக்குதா உன்னைத் தொட்ட தென்றலுக்கு தூக்கம் கெட்டு போனதே ஞாபகம் இருக்குதா

விக்கல் வரும் நேரமெல்லாம் வந்து போகும் எந்தன் பேரு ஞாபகம் இருக்குதா பூ வைத்ததுஞாபகம் இருக்குதா வந்து பூவாகினேன் ஞாபகம் இருக்குதா ஞாபகம் இருக்குதா ஞாபகம் இருக்குதா

உன் மீது நான் சாய பொய் ஒன்று சொல்வேனே ஞாபகம் இருக்குதா பொய் சொல்லும் அழகை நான் அன்போடு ரசிப்பேனே ஞாபகம் இருக்குதா

எண்ணாத போது வந்து நான் எங்கேயும் கிள்ளுவேன் உன் தோளில் நானும் சாய்ந்துதான் துள்ளாமல் துள்ளுவேன்

அடி பூவுக்கென்ன வாசம் தாங்க பாரமா இது காதலுக்கு நீங்கள் சொல்லும் வேதமா இது காதல் வரம் தானம்மாஆஆ ஞாபகம் இருக்குதா ஞாபகம் இருக்குதா



நீ வைத்த மருதாணி அழியாமல் காத்தேனே ஞாபகம் இருக்குதா தினம் வந்து அதைக் காட்டி தித்திக்க செய்தாயே ஞாபகம் இருக்குதா

நெஞ்சோடு ஊஞ்சல் ஆடுவேன் ஞாபகம் இருக்குதா சொல்லாமல் ஏதோ தேடுவேன் ஞாபகம் இருக்குதா நம்மோடு வந்த தென்றல் கூட வேர்க்குது வண்ணங்கள் பூசி வானவில்லும் தோற்றது உயிரோடு உறவாடுதுஊ

ஞாபகம் இருக்குதா அந்த தாஜ்மகால் பக்கம் வைத்து நானும் உன்னை பார்த்தது ஞாபகம் இருக்குதா அந்த ஷாஜகானும் நீயென்று நானும் உன்னை சொன்னது ஞாபகம் இருக்குதா

சிக்கெடுத்த கூந்தல் கொண்டு என்னைக் கட்டிப் போட்டது ஞாபகம் இருக்குதா பொட்டு வைக்க நானும் உந்தன் எச்சில் தொட்டு வைத்தது ஞாபகம் இருக்குதா

ஆரம்பமும் ஞாபகம் இருக்குதா காதல் உயிர் தந்தது ஞாபகம் இருக்குதா