Ilama Irunthu Enakku

Ilama Irunthu Enakku Song Lyrics In English

இல்லாம இருந்து எனக்கு பொறப்பு கொடுத்த தாயே சொல்லாம உடலுக்குள்ள உசுர வெச்ச தாயே நீ சுமந்த கடன் தீர்க்க யாராலும் ஆகாது கை மாறு செஞ்சாலும் சரிசமமா போகாது

இல்லாம இருந்து எனக்கு பொறப்பு கொடுத்த தாயே சொல்லாம உடலுக்குள்ள உசுர வெச்ச தாயே

காணாத கண்ணீரு கண்ணுக்குள்ள நின்னாலும் தேனாக நீ என்னை மடியில் ஏந்தி கொண்டாயே நீரோடு சேறாக நான் கலங்கி வந்தாலும் தோழாட மார்போட தாங்கி கொண்ட என் தாயே

அம்மா உன் கருணை தானே மேகமாக மாறுது உன்னோட அன்ப சொல்ல வானம் கூட போதாது உன்னை போல் சொர்க்கம் இங்கே வேறு ஏது

இல்லாம இருந்து எனக்கு பொறப்பு கொடுத்த தாயே சொல்லாம உடலுக்குள்ள உசுர வெச்ச தாயே

என்னென்ன ஆனாலும் சோகம் எல்லாம் உன்னோட முன்னாலும் பின்னாலும் யாருமில்லை என்னோட எங்க எங்க போனாலும் வானம் தானே கூட வரும் இன்ப துன்ப சூழலிலும் உன் மனசு பின்ன வரும்

தாயிகுள்ள ஈசன் உண்டு பிள்ளை மட்டும் தான் அறியும் ஈசனுக்கு தாயிருந்தால் அன்னை நெஞ்சம் தான் அறியும் உன்னை போல் சொந்தம் இங்கே வேறு ஏது

இல்லாம இருந்து எனக்கு பொறப்பு கொடுத்த தாயே சொல்லாம உடலுக்குள்ள உசுர வெச்ச தாயே நீ சுமந்த கடன் தீர்க்க யாராலும் ஆகாது கை மாறு செஞ்சாலும் சரிசமமா போகாது

இல்லாம இருந்து எனக்கு பொறப்பு கொடுத்த தாயே