Inge Ellarum Nallavangathan |
---|
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
இங்கே எல்லாரும் நல்லவங்கதான் நாம தூங்குறப்போ எல்லாரும் கெட்டவங்கதான் தூங்கி முழிக்கிறப்போ
எல்லாரும் நல்லவங்கதான் நாம தூங்குறப்போ ஹான் எல்லாரும் கெட்டவங்கதான் தூங்கி முழிக்கிறப்போ
அட தூங்கினால் ஆசையும் தூங்குது கண்ண முழிக்கையில் எல்லாமே முழிக்குது இதில் நல்லவன் கெட்டவன் யாரவன் சொல்லு நீ
எல்லாரும் நல்லவங்கதான் நாம தூங்குறப்போ எல்லாரும் கெட்டவங்கதான் தூங்கி முழிக்கிறப்போ
மானிட வாழ்வே அறுபதுதான் மாணவப் பருவம் இருபதுதான் மானிட வாழ்வே அறுபதுதான் மாணவப் பருவம் இருபதுதான்
கல்லூரி வாழ்வில் கொண்டாட்டம் தானே கல்யாணம் ஆனா திண்டாட்டமே கல்லூரி வாழ்வில் கொண்டாட்டம் தானே கல்யாணம் ஆனா திண்டாட்டமே
கிண்டலும் கேலியும் இல்லாமலே என்னதான் செய்வது சொல்லுங்களே கிண்டலும் கேலியும் இல்லாமலே என்னதான் செய்வது சொல்லுங்களே கன்னியரைக் கண்ணால் கண்டும் காளையர்கள் சும்மாருந்தா காளை அவன் காளை அல்ல கோழையம்மா கோழையம்மா
எல்லாரும் நல்லவங்கதான் நாம தூங்குறப்போ எல்லாரும் கெட்டவங்கதான் தூங்கி முழிக்கிறப்போ
தேவைகள் இல்லாம ஆசை இல்ல ஆசைகள் இல்லைன்னா ஒலகம் இல்ல தேவைகள் இல்லாம ஆசை இல்ல ஆசைகள் இல்லைன்னா ஒலகம் இல்ல
காற்றுள்ள போதே தூற்றுங்கள் என்று சொன்னது யாரு தெரியாதப்பா காற்றுள்ள போதே தூற்றுங்கள் என்று சொன்னது யாரு தெரியாதப்பா
வயசுல ஆடுவோம் ராஜாவைப் போல் வயசுல ஆடுவோம் ராஜாவைப் போல் ஓய்ந்ததும் தூங்குவோம் தாத்தாவைப் போல் இளமையில் சும்மாருந்தா வாலிபம் கேக்காதம்மா வயசுதான் ஏறுனா யார் தேடுவா யார் தேடுவா
எல்லாரும் நல்லவங்கதான் நாம தூங்குறப்போ எல்லாரும் கெட்டவங்கதான் தூங்கி முழிக்கிறப்போ
அட தூங்கினால் ஆசையும் தூங்குது கண்ண முழிக்கையில் எல்லாமே முழிக்குது இதில் நல்லவன் கெட்டவன் யாரவன் சொல்லு நீ
எல்லாரும் நல்லவங்கதான் நாம தூங்குறப்போ ஹே எல்லாரும் கெட்டவங்கதான் தூங்கி முழிக்கிறப்போ