Isaiyin Dheivam |
---|
பாடகி : எஸ் ஜானகி
பாடலாசிரியர் : வைரமுத்து
ஆஆஆஆஆஆஹ்ஆ ஆஆஆஆஆஆஹ்ஆ
இசையின் தெய்வம் அழைத்ததென்ன இதயம் கிடந்து துடித்ததென்ன உனையே நினைந்து பாடி வந்தேனே உயிரை சுமந்து ஓடி வந்தேனே
இசையின் தெய்வம் அழைத்ததென்ன இதயம் கிடந்து துடித்ததென்ன
ஆடாத கைகள் அசைகின்றதே ஆனந்த பார்வை சிரிக்கின்றதே காணாத காட்சி தெரிகின்றதே காற்றாகி நெஞ்சம் பறக்கின்றதே
தர்மம்ம்ம்ம்ம் தர்மம் வெல்லும் வேறென்ன சொல்ல நன்றி மறந்தால் நான் மகளல்ல தர்மம் வெல்லும் வேறென்ன சொல்ல நன்றி மறந்தால் நான் மகளல்ல வாய் வார்த்தை பேசு மெல்ல
இசையின் தெய்வம் அழைத்ததென்ன இதயம் கிடந்து துடித்ததென்ன
தேரேறி வந்தேன் திகைத்து விட்டேன் தெய்வத்தை ஏனோ மறந்து விட்டேன் வான் மேகம் நீங்கள் வணங்கி விட்டேன் இசை பாட இன்று இணங்கி விட்டேன்
அடடா உமக்கு சிலை வைக்க வேண்டும் பாதம் பணிந்து தலை வைக்க வேண்டும் அடடா உமக்கு சிலை வைக்க வேண்டும் பாதம் பணிந்து தலை வைக்க வேண்டும் பூப்போட வேண்டும் மீண்டும்ம்ம்ம்ம்
இசையின் தெய்வம் அழைத்ததென்ன இதயம் கிடந்து துடித்ததென்ன உனையே நினைந்து பாடி வந்தேனே உயிரை சுமந்து ஓடி வந்தேனே
இசையின் தெய்வம் அழைத்ததென்ன இதயம் கிடந்து துடித்ததென்ன