Kaalamenum Kadalinile |
---|
காலமெனும் கடலினிலே காதலெனும் படகினிலே காலமெனும் கடலினிலே காதலெனும் படகினிலே
காரிருளில் புயலைக் கண்டு பாய் மரமென்றே ஏமாந்தேன் பாய் மரமென்றே ஏமாந்தேன்
கண் திறந்த காலம் முதல் கண்ணாய் உன் மேல் ஆசை வைத்தேன் கண் திறந்த காலம் முதல் கண்ணாய் உன் மேல் ஆசை வைத்தேன்
காலமெல்லாம் காத்திருந்தேன் காதலையே அறிந்திலையே காதலையே அறிந்திலையே
காலமெனும் கடலினிலே காதலெனும் படகினிலே காரிருளில் புயலைக் கண்டு பாய் மரமென்றே ஏமாந்தேன் பாய் மரமென்றே ஏமாந்தேன்
ஆகாயத்தில் கோயில் கட்டி ஆசையோடு உன் சிலை எடுத்தேன் ஆகாயத்தில் கோயில் கட்டி ஆசையோடு உன் சிலை எடுத்தேன் பூஜை செய்தேன் புவி மேலே புரியாத புதிரானேன் புரியாத புதிரானேன்
காலமெனும் கடலினிலே காதலெனும் படகினிலே காரிருளில் புயலைக் கண்டு பாய் மரமென்றே ஏமாந்தேன் பாய் மரமென்றே ஏமாந்தேன்
தொடாமல் தொட்டணைத்தான் சுடாமல் சுட்டெரித்தான் தொடாமல் தொட்டணைத்தான் சுடாமல் சுட்டெரித்தான் தேடாமல் தேடுகிறேன் பாடாமல் பாடுகிறேன் பாடாமல் பாடுகிறேன்
காலமெனும் கடலினிலே காதலெனும் படகினிலே காரிருளில் புயலைக் கண்டு பாய் மரமென்றே ஏமாந்தேன் பாய் மரமென்றே ஏமாந்தேன்