Kaargala Megam |
---|
கார்கால மேகம் உன்னை பார்த்தால் கூடும் பொன் தேகம் மீது மழை சிந்து பாடும்
மண்ணில் முளைத்த வெள்ளி நக்ஷத்திரம் பார்வையால் தந்து விடு காதல் வரம்
விரல்கள் கொண்டு என்னை தீண்டினாள் விழிகள் கொண்டு என்னை வீழ்த்தினாள் மொழிகள் கொண்டு என்னை மாற்றினாள் இதயம் கொண்டு என்னை காட்டினாள்
ஏதேதோ எண்ணம் வருகிறதே உன் உறவை தேடி என் இதயம் என்னை கொல்கிறதே உலகம் தலை கீழாய் ஆனதே அடி பெண்ணே உன்னால் எல்லாமே மாறி போனதே
பேசாத நொடியில் எனை நொந்து போகிறேன் நீக்கினாய் ஏக்கம் இதழ் வழியில் மழையில் நான் நனைந்தேன் மலராய் நான் மலர்ந்தேன் நீ அணைக்க எந்தன் மனம் தொலைத்தேன்
நான் உன்னை பார்த்த நேரம் பூமியில் வெண்ணிலவொன்று விண் தாண்டி வந்ததோ என்று கண் வியந்து கிடந்தேன் நானே
ஹே நீ அருகில் வந்து பூவின் மேல் இதழ் கொண்டு முத்தங்கள் தந்த பல கனவு நான் உன் மார்பில் சாய நீ என்னை ஏந்தி கொள்ள கார்மேகம் எட்டி சாரல் தூவ தூவ தூவ
உன் நாணம் கண்ணில் தெரிகிறதே நான் மோகம் கொள்ள என் நெஞ்சம் தீயை சுடுகிறதே உன் மோகம் என்னை கொல்கிறதே என் தேகம் எல்லாம் உன் விரலால் கீதம் பிறக்கிறதே
கார்கால மேகம் உன்னை பார்த்தால் கூடும் பொன் தேகம் மீது மழை சிந்து பாடும்
மண்ணில் முளைத்த வெள்ளி நக்ஷத்திரம் பார்வையால் தந்து விடு காதல் வரம்