Kaarkala Megam Un Kangal

Kaarkala Megam Un Kangal Song Lyrics In English


பாடலாசிரியர் : மு மேத்தா

கார்கால மேகம் உன் கண்கள் மீது ஊர்கோலம் போவதென்ன என் ஆசை நெஞ்சே

கார்கால மேகம் உன் கண்கள் மீது ஊர்கோலம் போவதென்ன

தாகங்கள் இங்கே மேகங்கள் அங்கே ஏன் பெய்ததோ கண் மழை இந்த நேரம்

கார்கால மேகம் உன் கண்கள் மீது ஊர்கோலம் போவதென்ன

மாறாத சொந்தம் கல்யாண பந்தம் உன் வாழ்விலே பூங்குயில் கூவும் நேரம் காலங்கள் மாறும் காயங்கள் ஆறும் நாம் பாடலாம் வாழ்விலே அன்பின் ராகம்

எண்ணத்தில் எண்ணம் இணைகின்ற நாட்கள் கன்னத்தில் என்ன கண்ணீரின் பூக்கள் நான் உன் துணை அல்லவோ என் ஆசை நெஞ்சே


கார்கால மேகம் உன் கண்கள் மீது ஊர்கோலம் போவதென்ன

ஓர் வாசல் மூடும் ஓர் வாசல் நாடும் முள் மீதிலும் பூங்கொடி பாடி ஆடும் நேற்றென்று ஒன்று இன்றில்லை என்று ஓர் பாடமே கூறுமே காலை வானம்

பூமாலையாக நான் மாற வேண்டும் பூப்போல நாளும் நீ வாழ வேண்டும் நீராடுவாய் தென்றலே என் ஆசை நெஞ்சே

கார்காலம் மேகம் உன் கண்கள் என்றும் காணாது என் கண்மணி காலங்கள் தோறும் கார்காலம் மேகம் உன் கண்கள் என்றும் காணாது என் கண்மணி

சோகங்கள் இங்கே நீராவி ஆகும் சொந்தங்களே வாழுமே எந்த நாளும்

கார்காலம் மேகம் உன் கண்கள் என்றும் காணாது என் கண்மணி