Kaasu |
---|
காசு ஆளூற நாடாச்சு சாமி காலம் கரையுது முடிவ காமி மாசு மருந்துக்கு மலடாச்சு பூமி வாழ வழிவரும் உசுர சேமி
மனசு பதறுதடா பணமே மாத்துதடா மறதிய பழகிக்கடா காலம் வராதே
மனுச வன்மமடா மாறாது வாழ்க்கையடா பொறுப்பா பொழச்சுக்கடா வயசு நில்லாதே
காசு ஆளூற நாடாச்சு சாமி காலம் கரையுது முடிவ காமி மாசு மருந்துக்கு மலடாச்சு பூமி வாழ வழிவரும் உசுர சேமி
காவி கறுப்பத்தான் அரசியலா செஞ்சானே மேட போட்டுத்தான் இளமனச கெடுத்தானே ஒண்ணும் புரியாம தெனறித்தான் நின்னானே ஊடகம் இதையும்வச்சு காசாக்கித்தான் தின்னானே
துப்பாக்கி ரவைகளுக்கு உசுர விட்டாலும் துளியும் பயப்படல நாங்க எந்நாளும் நெஞ்சு நெலகொலஞ்சு இருக்குது தானே நெலம மாறும் வர பொறுக்கணும் தானே
சேரு போட்டு ஆட்சி நடத்தும் ஆளு யாருடா இங்க சேறு சகதி ஆன ரோட்ட மாத்த பாருடா பெசய பெசய கொளஞ்சு போகும் சேறு நாங்கடா எங்க தசய கிழிச்சு கசக்கி பிழிய நீங்க யாருடா
மல கழிவெடுக்க மனுசன விட்டோமே நிலவுல எடம்புடிக்க பெரும்பாடு பட்டோமே அட்டப்புழுவா அங்கம் முழுக்க உறியுற அரசியல அனலா சுட்டுத்தானே எரிச்சுடு தேவ இல்ல
காசு ஆளூற நாடாச்சு சாமி காலம் கரையுது முடிவ காமி மாசு மருந்துக்கு மலடாச்சு பூமி வாழ வழிவரும் உசுர சேமி