காத்திருந்து காத்திருந்து பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Vijayakanth, Revathi | ||
Movie | Vaidehi Kathirunthal | ||
Music By | Ilaiyaraaja | ||
Lyric By | Vaali | ||
Singers | P. Jayachandran | ||
Year | 1984 |
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி
நேத்துவரை சேர்த்துவச்ச
ஆசைகள் வேகுதடி
நீ இருந்து நான் அணைச்சா
நிம்மதி ஆகுமடி
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி
ஆரிரோ..ஆரிரோ..
தங்க சலங்க கொண்டு
தாய்மாமன் வருவாரு
பொண்ணு மணியும் கொண்டு
பொன்கூட தருவாரு
பொழுதோட தூங்கு கண்ணே
ஆரி ஆரிரோ
விடிஞ்சாக்கா முழிச்சுகலாம்
ஆரி ஆரிரோ
முக்குளிச்சு நானெடுத்த
முத்துச்சிப்பி நீதானே
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள
பத்திரமா வெச்சேனே
வெச்சதிப்போ காணாம
நானே தேடுறேன்
ராத்திரியில் தூங்காம
ராகம் பாடுறேன்
நான் படிக்கும் மோகனமே
நான் படைச்ச சீதனமே
தேன் வடிச்ச பாத்திரமே
தென்மதுர பூச்சரமே
கண்டது என்னாச்சு
கண்ணீரில் நின்னாச்சு
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி
நீரு நிலம் நாலு பக்கம்
நான் திரும்பி பாத்தாலும்
அந்தப்பக்கம் இந்தப்பக்கம்
அத்தனையும் நீயாகும்
நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற
நாடியிலே சூடேத்தி நீதான் வாட்டுற
ஆலையிட்ட செங்கரும்பா
ஆட்டுகிற எம் மனச
யாரவிட்டு தூதுசொல்லி
நான் அறிவேன் உம் மனச
உள்ளமும் புண்ணாச்சு
காரணம் பெண்ணாச்சு
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி
நேத்துவரை சேர்த்துவச்ச
ஆசைகள் வேகுதடி
நீ இருந்து நான் அணைச்சா
நிம்மதி ஆகுமடி
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி
Kaathirunthu Kaathirunthu Song Lyrics from movie Vaidehi Kathirunthal. Kaathirunthu Kaathirunthu song sung by P. Jayachandran. Kaathirunthu Kaathirunthu Song Composed by Ilaiyaraaja. Kaathirunthu Kaathirunthu Song Lyrics was Penned by Vaali. Vaidehi Kathirunthal movie cast Vijayakanth, Revathi in the lead role actor and actress. Vaidehi Kathirunthal movie released on 1984