Kaatru Vegama Illai |
---|
பாடலாசிரியர் : வாலி
இருவர் :
ஹே ஹே ஹே ஹேஹ்
காற்று வேகமா இல்லை காதல் வேகமா காற்று வேகமா இல்லை காதல் வேகமா போட்டி போடலாம் வாம்மா போட்டி போடலாம் கோல மாமயில் கூட இருக்கையில் கோல மாமயில் கூட இருக்கையில் கொஞ்ச தோணுதே ஏம்மா கொஞ்ச தோணுதே
கோல மாமயில் கூட இருக்கையில் கொஞ்ச தோணுதோ ஏய்யா கொஞ்ச தோணுதோ காற்று வேகமா இல்லை காதல் வேகமா போட்டி போடலாம் வாய்யா போட்டி போடலாம்
இருவர் :
விண்ணுக்கு நீலம் இந்த கண்கள் இட்ட பிச்சையோ பொன்னுக்கு மஞ்சள் வண்ணம் கன்னம் கொண்ட மிச்சமோ
விண்ணுக்கு நீலம் இந்த கண்கள் இட்ட பிச்சையோ பொன்னுக்கு மஞ்சள் வண்ணம் கன்னம் கொண்ட மிச்சமோ
மாலை மயங்குது மயங்கட்டும் விடம்மா மையல் தொடங்குது தொடங்கட்டும் கொடம்மா மாலை மயங்குது மயங்கட்டும் விடம்மா மையல் தொடங்குது தொடங்கட்டும் கொடம்மா
இன்பத்தின் எல்லை எங்கே எட்டி எட்டி செல்லுமோ எண்ணங்கள் போகும் வேகம் என்னை உன்னை வெல்லுமோ
இன்பத்தின் எல்லை எங்கே எட்டி எட்டி செல்லுமோ எண்ணங்கள் போகும் வேகம் என்னை உன்னை வெல்லுமோ
பாட்டு பிறக்குது பிறக்கட்டும் விடய்யா ஆசை நதிக்கொரு அணைக்கட்டு ஏதய்யா பாட்டு பிறக்குது பிறக்கட்டும் விடய்யா ஆசை நதிக்கொரு அணைக்கட்டு ஏதய்யா
காற்று வேகமா இல்லை காதல் வேகமா
பச்சை புல் மேடையென்று தென்றல் எண்ணிக் கொண்டதோ பட்டுப்பூ மெத்தை மீது தத்தித் தத்தி சென்றதோ
பச்சை புல் மேடையென்று தென்றல் எண்ணிக் கொண்டதோ பட்டுப்பூ மெத்தை மீது தத்தித் தத்தி சென்றதோ
காதல் பவனியில் இது ஒரு விதமா காணக் கிடைத்தது மனதுக்கு இதமா
அங்கே வா தென்னஞ்சோலை ஒன்றையொன்று பின்னுது அம்மாடி தென்னைப் போலே உன்னை உள்ளம் எண்ணுது
சொந்தம் அணைக்குது அணைக்கட்டும் விடம்மா சொர்க்கப்புரிக்கொரு படிக்கட்டு ஏதம்மா
காற்று வேகமா இல்லை காதல் வேகமா போட்டி போடலாம் வாம்மா போட்டி போடலாம் போட்டி போடலாம் வாய்யா போட்டி போடலாம்