Kadavulin Padaippe Kathalum

Kadavulin Padaippe Kathalum Song Lyrics In English


கடவுளின் படைப்பே காதலும் பசியும் அனுபவித்தால் என்ன போச்சு கடவுளின் படைப்பே காதலும் பசியும் அனுபவித்தால் என்ன போச்சு ஆஆஆ அடிக்கடி வாங்கட்டும் மூச்சு அடி அடிக்கடி வாங்கட்டும் மூச்சு

உடையின்றி பிறந்தோம் உடையின்றி போவோம் உடையின்றி பிறந்தோம் உடையின்றி போவோம் நடுவினில் நடப்பது சில நாள் ஆஆஹ்ஹலாலாலாலா அடி நடக்கட்டும் மன்மத திருநாள்

மனதுக்கு வெறுத்தால் மதுவிலக்கு இதில் மாதத்தில் சில நாள் விதிவிலக்கு மனதுக்கு வெறுத்தால் மதுவிலக்கு இதில் மாதத்தில் சில நாள் விதிவிலக்கு எரியட்டும் அறையில் சிறு விளக்கு எரியட்டும் அறையில் சிறு விளக்கு அங்கு எனக்கும் உனக்கும் ஒரு வழக்கு

கடவுளின் படைப்பே காதலும் பசியும் அனுபவித்தால் என்ன போச்சு அடி அடிக்கடி வாங்கட்டும் மூச்சு

படுக்கையை பள்ளி என்றழைப்பான் நம் படிப்பினை அங்கே முடித்திடத்தான் படுக்கையை பள்ளி என்றழைப்பான் நம் படிப்பினை அங்கே முடித்திடத்தான் படிக்கின்ற வயதும் இதுவல்லவா ஆஆஹ்ஹலாலாலாலா இதில் பல சுகம் தருவது மதுவல்லவா


பாவம் புண்யம் பரலோகம் என்று பழங்கதை சொல்வதில் லாபமில்லை பாவம் புண்யம் பரலோகம் என்று பழங்கதை சொல்வதில் லாபமில்லை பாவம் ராகம் தாளத்துடன் பாவம் ராகம் தாளத்துடன் நாம் பல கதை படிப்பது பாவமில்லை

கடவுளின் படைப்பே காதலும் பசியும் அனுபவித்தால் என்ன போச்சுஆஆஅ அடிக்கடி வாங்கட்டும் மூச்சு அடி அடிக்கடி வாங்கட்டும் மூச்சு

ஆஆஹ்ஹலாலாலாலா (2)