Kadellam Pichipoovu |
---|
பாடகர்கள் : இளையராஜா மற்றும் குழு
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
காடெல்லாம் பிச்சிபூவூ கரையெல்லாம் செண்பகப்பூ நாடே மணக்குதில்ல அந்த நல்ல மகன் போற பாதை
காடெல்லாம் பிச்சிபூவூ
சாய்ந்தாடும் நெற்கதிரே சதிராடும் வாழைகளே சாய்ந்தாடும் நெற்கதிரே சதிராடும் வாழைகளே தேனாட்டம் வெள்ளம் ஓட ஓடுதடி என் மனசு தேனாட்டம் வெள்ளம் ஓட ஓடுதடி என் மனசு
செந்தாழம் பூவில் உள்ள வாசம் கொள்ளை போக ஏதேதோ மோகம் தீராத தாகம் ஏதேதோ மோகம் தீராத தாகம்
காடெல்லாம் பிச்சிபூவூ கரையெல்லாம் செண்பகப்பூ
ஏலோஏலேலொலோ ஏலோ கரிசக்காடு ஏலோ பலமாகத்தான் ஏலோ ஏத்தம் கட்டி ஏலோ ஏலோஏலேலொலோ
அத்தை மவன் ஏலோ இறைக்கும் தண்ணி ஏலோ அத்தனையும் ஏலோ சக்கரைதான் ஏலோ சக்கரைதான்ஏலேலோ
வயலெல்லாம் அறுவடையாம் கட்டழகு பொண்ணுகளாம் வயலெல்லாம் அறுவடையாம் கட்டழகு பொண்ணுகளாம் பார்த்தா கிறங்குதில்ல செவ்வரளி தோரணமாம் பார்த்தா கிறங்குதில்ல செவ்வரளி தோரணமாம்
கொண்டாடும் தென்றல் வந்து தொட்டுச் செல்லும்போது தாளாத மோகம் யாராலே தீரும் தாளாத மோகம் யாராலே தீரும்
காடெல்லாம் பிச்சிபூவூ கரையெல்லாம் செண்பகப்பூ நாடே மணக்குதில்ல அந்த நல்ல மகன் போற பாதை
காடெல்லாம் பிச்சிபூவூ