Kadhal Kavidhai |
---|
காதல் கவிதை பாட கனவே நல்லது பகலில் பாடல் பாட பயமாய் உள்ளது சந்தித்தால் ஊருக்குள் எதிர்ப்பு உள்ளுக்குள் நெருப்பு சந்தோஷத் தவிப்பு கொதிப்பு அம்மாடி இப்போது ஆள் இல்லையே
காதல் கவிதை பாட கனவே நல்லது
இந்த கண்களை உந்தன் கண்கள் தொட்டு போனதடி தொட்டு போனதும் எந்தன் கற்பும் கெட்டுப் போனதடி கற்பில் நீ ஒரு ராமன் தானே கம்பன் சொன்னபடி உன் கண்கள் பட்டதும் பூத்திடும் அந்த பட்டுப் போனக் கொடி
உன்னைப் போலொரு பெண் பிள்ளை உலகில் கண்டதுமில்லை என்னை கண்டதும் சொல்லாதே கவிஞர் சொல்லிய சொல்லை
பட்டுச்சேலையில் ஒட்டும் வேளையில் கிண்டல் கேலி தேவையில்லை
காதல் கவிதை பாட கனவே நல்லது
உன்னைக் கண்டதும் என்னிரு கண்ணில் வெட்கம் வந்தது வா உள்ளே உள்ளது சொல்லிட வந்தால் அச்சம் வந்ததுவாம்ஹும்
நெஞ்சுக்குள் ஒரு சொல் வந்து சிக்கிக்கொண்டது வா தொண்டைக்குள் ஒரு முள் வந்து விக்கிக்கொண்டது வா
கட்டில் மேலே பெண் என்றும் கப்பம் கட்டியதில்லை வட்டியும் இட்டு வாங்காமல் ஆண்கள் விட்டதுமில்லை அள்ளிக் கொள்வதும் கிள்ளிக் கொள்வதும் இன்பம் பூசிய தொல்லை தொல்லை
காதல் கவிதை பாட கனவே நல்லது பகலில் பாடல் பாட பயமாய் உள்ளது சந்தித்தால் ஊருக்குள் எதிர்ப்பு உள்ளுக்குள் நெருப்பு சந்தோஷத் தவிப்பு கொதிப்பு அம்மாடி இப்போது ஆள் இல்லையே
காதல் கவிதை பாட கனவே நல்லது பகலில் பாடல் பாட பயமாய் உள்ளது