Kaintha Sinaiyum Meengal

Kaintha Sinaiyum Meengal Song Lyrics In English

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

காய்ந்த சினையும் மீன்களாகும் புதிய வெள்ளம் வந்ததும் சிந்த மரமும் பசுமையாகும் புதிய வேர்கள் பாய்ந்ததும்

நான்கு வேதம் சொல்வதும் ஊமைக் காயம் காயமே ஆனா போதும் பெண்மையின் அடுத்த வாழ்வும் நியாயமே

தவறு செய்தாள் அகலிகை கதையில் கண்டோம் இல்லையா தவறிச் செய்தால் என்பதால் ராமன் காக்க வில்லையா ராமன் காக்க வில்லையா

காய்ந்த சினையும் மீன்களாகும் புதிய வெள்ளம் வந்ததும் சிந்த மரமும் பசுமையாகும் புதிய வேர்கள் பாய்ந்ததும்

உடலின் பாவம் நீரிலே உடலும் தானே தொல்லையே மனதில் பாவம் இல்லையேல் வாழ்வில் பாவம் இல்லையே

கலந்து சென்றான் கல்லையே பிறந்து வந்தான் பிள்ளையே கதையை மீண்டும் சொல்கிறேன் கர்ணன் இந்த எல்லையே கர்ணன் இந்த எல்லையே

காய்ந்த சினையும் மீன்களாகும் புதிய வெள்ளம் வந்ததும் சிந்த மரமும் பசுமையாகும் புதிய வேர்கள் பாய்ந்ததும்

விதவைக்கெல்லாம் மறுமணம் விழுந்து விட்டால் ஏனில்லை புதுமை கண்ட நாட்டிலே எனக்குதானா வாழ்வில்லை

நதி பிரிந்தால் கொள்ளிடம் மீண்டும் சேர்ந்தால் காவிரி நடுவில்தானே ஸ்ரீரங்கம் நன்மை தீமை அவனிடம் நன்மை தீமை அவனிடம்