Kalviyil Saraswathi |
---|
உமா ரமணன் மற்றும் பி எஸ் சசிரேகா
பாடலாசிரியர் : வாலி
கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி கருணையில் பார்வதி நீயம்மா ஆயினும் நல்ல நாயகி அந்த நளாயினி போல் வாழம்மா
கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி
கல்லானாலும் புல்லானாலும் கணவனை கொண்டாடு அவன் காலடி நிழலில் வாழ்வதுதானே குலமகள் குலப்பண்பாடு
ஏனென்று கேள்விகள் கேட்காதே ஏறிட்டு முகத்தைப் பார்க்காதே கோடு கிழித்தால் தாண்டாதே கோபத்தை கொஞ்சம் தூண்டாதே
கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி கருணையில் பார்வதி நீயம்மா ஆயினும் நல்ல நாயகி அந்த வாசுகி போல் வாழம்மா
கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி
பேரும் புகழும் புருஷனை சேர காரணம் மனவியம்மா அந்த வள்ளுவன் அறிவை வையகம் அறிந்தது வாசுகி உதவியம்மா
ஆணவம் கொண்டு பேசாதே அடங்கி போவது மரியாதை அறிவால் எதையும் எடை போடு தவறாய் நடந்தால் தடை போடு
கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி கருணையில் பார்வதி நீயம்மா ஆயினும் வீரத் தாயென அன்னை இந்திராகாந்தி போல் வாழம்மா
கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி
வீடானாலும் நாடானாலும் விளங்கணும் பெண்ணாலே –அவள் தன்னை நம்பும் தைரியத்தோடு வாழணும் மண்மேலே
சோதனை வந்தால் தாங்கிவிடு சாதனை செய்து வென்று விடு வீரனின் தாயென பேரை எடு உன் கை உயரும் கவலை விடு
வாசுகி யாரு வள்ளுவன் யாரு ஒண்ணும் புரியவில்லை இந்த பாடம் எல்லாம் படிக்கிற கிளாசுக்கு நான் இன்னும் வரவில்லை
வாசுகி யாரு வள்ளுவன் யாரு ஒண்ணும் புரியவில்லை இந்த பாடம் எல்லாம் படிக்கிற கிளாசுக்கு நான் இன்னும் வரவில்லை
அப்பா சொல்லி தரவில்லை ஹாஸ்டல் பக்கம் வரதில்ல அம்மாவுக்கும் பல வேலை என்னை நினைக்க டைம் இல்லை