Kalyanamam Kacheriyam |
---|
பாடலாசிரியர் : வாலி
கல்யாணமாம் கச்சேரியாம் பொன்னூஞ்சலாம் பூமாலையாம் ஜோ ஜோ ஜோ ஜோஜஜோ
கல்யாணமாம் கச்சேரியாம் பொன்னூஞ்சலாம் பூமாலையாம் ஜோ ஜோ ஜோ ஜோஜஜோ கல்யாணியில் ஆலாபனை கண்ணீரில் ஆராதனை
நான் வளர்த்த பூங்குருவி வேரிடந்தேடி நான் வளர்த்த பூங்குருவி வேரிடந்தேடி செல்ல நினைத்த உடன் அமைந்ததம்மா அதற்கொரு ஜோடி செல்ல நினைத்த உடன் அமைந்ததம்மா அதற்கொரு ஜோடி
நிழல் படமாய் ஓடுது என் நினைவுகள் கோடி அந்த நினைவுகளால் வாழ்க்கையிலே காவியம் பாடி
கல்யாணமாம் கச்சேரியாம் பொன்னூஞ்சலாம் பூமாலையாம் ஜோ ஜோ ஜோ ஜோஜஜோ
ஏடெடுத்தேன் எழுதி வைத்தேன் நானொரு பாட்டு ஏடெடுத்தேன் எழுதி வைத்தேன் நானொரு பாட்டு அதை உனக்களித்தேன் பாடுக நீ ராகத்தை போட்டு அமைதியை நான் வாங்கிக் கொள்வேன் இறைவனைக் கேட்டு அவன் நினைப்பது போல் மணம் முடிப்பான் மாலையை சூட்டி
கல்யாணமாம் கச்சேரியாம் பொன்னூஞ்சலாம் பூமாலையாம் ஜோ ஜோ ஜோ ஜோஜஜோ கல்யாணியில் ஆலாபனை கண்ணீரில் ஆராதனை
காவியத்தில் ஓவியத்தில் இருப்பது காதல் காவியத்தில் ஓவியத்தில் இருப்பது காதல் அது நடைமுறையில் என் வரையில் ஒரு வகை காதல் தனிமரமாய் இருப்பதற்கே பிறந்தவன் நானே உந்தன் தலைவனுடன் நலம் பெற நீ வாழியம்மானே
கல்யாணமாம் கச்சேரியாம் பொன்னூஞ்சலாம் பூமாலையாம் ஜோ ஜோ ஜோ ஜோஜஜோ கல்யாணியில் ஆலாபனை கண்ணீரில் ஆராதனை