Kanava Kanava |
---|
இதயத்தில் இருப்பவனே எனக்கென பிறந்தவனே வா காதலோடு காதலாகியே எனைவிட்டு நடக்கையிலும் உயிர் தொட்டு கடப்பவனே வா நீயும் பாதி நானும் பாதி வா உறவே நானாக என் உயிரே நீயாக
கணவா கணவா என் கணவா கனவில் காணும் நினைவே வா உறவா உறவா என் உறவா உயிர் சேர்ந்திட வா
அருகினில் வருகையில் இடைவெளி குறைகிறதே நான் உந்தன் கண்ணில் என்னை காணவே விழியது விடை தருதே விடையது உயிர் தருதே நான் உன்னை கண்டு உள்ளம் சேர என் மனமே நீயாக உன் குணமே நானாக
இதமா இதமா உன்னிடமா இதயம் சேரந்தே கரைந்திடுமா வரமா வரமா என் வசமா மனதில் வாழ்ந்திடு
அழகாய் அழகாய் தொலைகிறேன் ஆசையாலே சிறகாய் இதயம் விரிகிறதே விலகா விலகா இருமனம் சேரத்தானே இரவாய் பகலாய் தவிக்கிறதே
கனா கனா கண்ணோரமாய் வினா வினா நெஞ்சோரமாய் நில்லாமலே செல்லாதே நீ கனாக்கள் போகும் சாலையில்