Kandhaavaram Thandharlvaan

Kandhaavaram Thandharlvaan Song Lyrics In English


ஆண் கந்தா வரம் தந்தாளுவாய்
திருச்செந்தூரில் வாழ்வோனே
வந்தாளுவாய் சாமி
கந்தா வரம் தந்தாளுவாய்
திருச்செந்தூரில் வாழ்வோனே
வந்தாளுவாய்
வந்தாரை வாழ வைக்கும்
தாய் தந்தை நீ ஓஓஓ
எங்கள் கந்தா சுகந்தா
என்றாடிப் பாடவே

ஆண் கந்தா வரம் தந்தாளுவாய்
திருச்செந்தூரில் வாழ்வோனே வந்தாளுவாய்
சாமி கந்தா வரம் தந்தாளுவாய்
திருச்செந்தூரில் வாழ்வோனே வந்தாளுவாய்

பெண் அந்த மிகுந்திடும்
சந்ததமும் புகழ் எங்கள் தேவி
சொந்தமும் பந்தமும் தந்திட இங்கே
வந்தாள் மேவி

ஆமாம்

பெண் அந்த மிகுந்திடும்
சந்ததமும் புகழ் எங்கள் தேவி
சொந்தமும் பந்தமும் தந்திட இங்கே
வந்தாள் மேவி

தாயே

பெண் சிந்தனை செய்யும்
சேய்களை காத்திடு
இந்த நாளில்
உந்தனைப் பாடிட நல்லது தந்திடு
எங்கள் வாழ்வில்

தேவி

பெண் சிந்தனை செய்யும்
சேய்களை காத்திடு
இந்த நாளில்
உந்தனைப் பாடிட நல்லது தந்திடு
எங்கள் வாழ்வில்

ஆமாம்

ஆண் அம்பாள் அம்பாள் என்று சொன்னாலே
செய்த வினை எங்கோ போகும்
அதுக்கு முன்னாலே
எஹே எஹே எஹே

பெண் அம்பாள் அம்பாள் என்று சொன்னாலே
செய்த வினை எங்கோ போகும்
அதுக்கு முன்னாலே
அங்கும் இங்கும் எங்கும் உலகம்
வாழ்வதுன்னாலே
நலம் தங்கும் வரங்கள் இன்றே அருள்
ஆயிரங் கண்ணாளே

ஆமா

பெண் அங்கும் இங்கும் எங்கும் உலகம்
வாழ்வதுன்னாலே
நலம் தங்கும் வரங்கள் இன்றே அருள்
ஆயிரங் கண்ணாளே

தாயே

அனைவரும் : அம்பாள் அம்பாள் என்று சொன்னாலே
செய்த வினை எங்கோ போகும்
அதுக்கு முன்னாலே

அனைவரும் : கந்தா வரம் தந்தாளுவாய்
திருச்செந்தூரில் வாழ்வோனே வந்தாளுவாய்

தேவி


அனைவரும் : கந்தா வரம் தந்தாளுவாய்
திருச்செந்தூரில் வாழ்வோனே வந்தாளுவாய்

திகதத் தாம்
தகதாம் தரிகிடதாம்
தையத் தையத் தோம் தை

ஓ ஓ ஓ ஓ ஹேய்
தண்ணிக் கொடம் தூக்கிக்கிட்டு
தங்கமே நீ எங்கே போறே

ஆண் ஆஹா எங்கே போறே எங்கே போறே

பெண் தென்னந் தோப்புக் குள்ளிருக்கும்
மன்னனை நான் பாக்கப் போறேன்
பாக்கப் போறேன் பாக்கப் போறேன்

ஆண் ஆகூடை மேலே
கூடை வைச்சு
குமரிப் பொண்ணே எங்கே போறே
எங்கே போறே எங்கே போறே

பெண் கொடிக்காலு ஓரத்துக்கு
குசு குசுன்னு பேசப் போறேன்
பேசப் போறேன் பேசப் போறேன்

ஆண் ஆ பொட்டு வைச்சு பூ முடிச்சு
பூவையே நீ எங்கே போறே
எங்கே போறே எங்கே போறே

பெண் கட்டப் போகும் ஆசை மச்சான்
காத்திருப்பான் காணப் போறேன்
காணப் போறேன் காணப் போறேன்

அனைவரும் : தந்தானத் தன தன தந்தின்னா
தந்தனத் தானா தந்தானா
தந்தானத் தன தான தந்தின்னா
தந்தனத் தானா தந்தானா

பெண் ஏத்தங்கட்டி தண்ணி யெறைச்சு
ஏரைப் பூட்டி வயல் உழுது
ஏத்தங்கட்டி தண்ணி யெறைச்சு
ஏரைப் பூட்டி வயல் உழுது
பாடு பட்டுப் பயிரு செஞ்சா
பாலும் சோறும் போடுவோமே

ஆண் தந்தானத் தன தன தந்தின்னா
தந்தனத் தானா தந்தானா
ஆத்தங்கரை ஓரத்திலே
பாத்தி கட்டி நாத்து நட்டு
ஆத்தங்கரை ஓரத்திலே
பாத்தி கட்டி நாத்து நட்டு
களை எடுக்கும் கைகளுக்கு
வளையல் செஞ்சு போடுவோமே

பெண் தந்தானத் தன தன தந்தின்னா
தந்தனத் தானா தந்தானா

அனைவரும் : மழை பொழிஞ்சு பயிர் விளைஞ்சு
மனசு போல நாமிருக்க
மழை பொழிஞ்சு பயிர் விளைஞ்சு
மனசு போல நாமிருக்க
தை பொறந்தா வழி பிறக்கும்
கை நிறைய பணமிருக்கும்
தை பொறந்தா வழி பிறக்கும்
கை நிறைய பணமிருக்கும்

அனைவரும் : தந்தானத் தன தன தந்தின்னா
தந்தனத் தானா தந்தானா
போடு
அனைவரும் : தந்தானத் தன தன தந்தின்னா
தந்தனத் தானா தந்தானா
போடு
அனைவரும் : தந்தானத் தன தன தந்தின்னா
தந்தனத் தானா தந்தானா
போடு ஹோய்

ஓஒஓஓஓஓஒஓஓஓஒஓஒ