Kangalal Naan Varainthen |
---|
பாடகர்கள் : பி சுசீலா மற்றும் கே ஜே யேசுதாஸ்
பாடலாசிரியர் : வாலி
கண்களால் நான் வரைந்தேன் அன்பெனும் ஓர் கவிதை தேன் மலர் மறப்பதுண்டோ தென்றலே உன் நினைவை
கண்களால் நான் வரைந்தேன் அன்பெனும் ஓர் கவிதை தேன் மலர் மறப்பதுண்டோ தென்றலே உன் நினைவை
மார்கழி மாதம் என்றால் ஆஆஆஆஹ்ஆ போர்வை போல் நானிருக்க சித்திரை மாதம் என்றால் வாடை போல் நீயிருக்க
நான் சூடும் மாலைகள் நீ கொண்ட கைகள் நெய் கொண்ட தீபங்கள் மை கொண்ட கண்கள் பூவும் பொட்டும் மேவும் பெண்மை பூவைப் போலே நாளும் மென்மை
கண்களால் நான் வரைந்தேன் அன்பெனும் ஓர் கவிதை தேன் மலர் மறப்பதுண்டோ தென்றலே உன் நினைவை
உன் நலம் நினைப்பதெல்லாம் என் நலம் நானறியேன் உன்னை நான் வாழ வைக்க என்னையே நான் கொடுப்பேன்
சொந்தங்கள் பந்தங்கள் உண்டான பின்பு மென்மேலும் வளர்கின்ற நிலவாகும் அன்பு உன்னைப் பாடும் எந்தன் உள்ளம் என்றும் பொங்கும் கங்கை வெள்ளம்
கண்களால் நான் வரைந்தேன் அன்பெனும் ஓர் கவிதை தேன் மலர் மறப்பதுண்டோ தென்றலே உன் நினைவை
காலங்கள் கனியும் வரை கன்னி நான் காத்திருப்பேன் கண்ணனின் வரவுக்கென்றே கண் மலர் பூத்திருப்பேன்
கல்யாண வைபோகம் ஊர்கோலம் யாவும் நன் நாளில் உன்னோடு நான் காண வேண்டும் எண்ணம் எல்லாம் கண்ணில் மின்ன சொல்லில் சொல்ல மிச்சம் என்ன
கண்களால் நான் வரைந்தேன் அன்பெனும் ஓர் கவிதை தேன் மலர் மறப்பதுண்டோ தென்றலே உன் நினைவை
கண்களால் நான் வரைந்தேன் அன்பெனும் ஓர் கவிதை கண்களால் நான் வரைந்தேன் அன்பெனும் ஓர் கவிதை