Kangale Kadhal Seithale |
---|
ஆஅஆஆஆஆஆ
கண்களே காதல் செய்தாலே பாவம் கானல் நீராலே தீராது தாகம் நெஞ்சமே அன்பு வைத்தாலே சோகம் அது நிலைக்காமல் கலைகின்ற மேகம்
கண்களே காதல் தெய்வீக ராகம் கானல் நீரல்ல காவேரி ஆகும் நெஞ்சமே அன்பு வைத்தாலே பாசம் அது பிரிந்தாலும் மறையாத வாசம்
காதல் பெண்மைக்கு பகையானது காணும் உண்மைக்கு புறம்பானது
காதல் கண் பேசும் மொழியாவது இன்ப வாழ்வுக்கு வழியாவது
போதும் போதும் அலை பாயும் உள்ளம் என்ன காதல் ஒரே சோக வெள்ளம்
கண்களே காதல் தெய்வீக ராகம் கானல் நீரல்ல காவேரி ஆகும்
காதல் பூவல்ல முள்ளானது என்றும் கனியல்ல கல்லானது
காதல் பார்வைக்கு தெரியாதது காலம் கனியாமல் புரியாதது
காதல் வாழ்க்கை ஓர் போராட்டம்தானோ கண்ணில் வழியாத நீரோட்டம்தானோ கண்களே காதல் செய்தாலே பாவம் கானல் நீராலே தீராது தாகம்
கண்களே காதல் தெய்வீக ராகம் கானல் நீரல்ல காவேரி ஆகும் நெஞ்சமே அன்பு வைத்தாலே பாசம் அது பிரிந்தாலும் மறையாத வாசம்