Kanne En Kanne

Kanne En Kanne Song Lyrics In English

கண்ணே என் கண்ணே உன் கன்னத்தில் செவ்வானமா பெண்ணே செம்பொன்னே அது தாய்மையின் வண்ணமா

கண்ணே என் கண்ணே உன் கன்னத்தில் செவ்வானமா பெண்ணே செம்பொன்னே அது தாய்மையின் வண்ணமா

வாசல் வந்த வெண்ணிலா இனி வளர் பிறையாகுமே நம் ஆசை என்னும் கோலமே ஒரு பிள்ளை தோன்றுமே

நீயும் நானும் தாயும் தந்தை ஆகும் காலமே

கண்ணே என் கண்ணே உன் கன்னத்தில் செவ்வானமா பெண்ணே செம்பொன்னே அது தாய்மையின் வண்ணமா

புழுதி காட்டு வாழ்க்கையில் கட்டி தங்கம் வந்ததே அடியே என் கொடியே ஒரு பரிசு கேளடி

மடியை ஏந்தி வந்ததும் ஒரு புதையல் தந்த சாமியே நீயே என் பரிசு இனி புதுசா வேணுமா

என் ஆசை பூங்கொடி உன் ஜீவன் ரெண்டடி என் பங்கு சேர்த்துமே நீ உண்ணுடி

சுக்க மிஞ்சிய மருந்து இருக்கா உன்னை காட்டிலும் உறவு இருக்கா பெத்த தாயை போல் நீ தாங்க கண்ணு பேரு காலம் எனக்கு

தாய் பால் ஊட்டும் வேளையில் தமிழும் சேர்த்து ஊட்டனும் ஊரே கொண்டாட அத பார்த்து ரசிக்கணும்

வீட்டு பாடம் போலவே மாட்டு பாடம் படிக்கணும் கல்வி விவசாயம் ரெண்டும் கண்கள் ஆகுமே

ஆகாய ஊஞ்சலில் தாலாட்டி பார்க்கணும் ஊர் ஆளும் பிள்ளையாய் ஆள் ஆக்கணும்

உன் வயதில் வளருது ஒரு விளக்கு வம்சம் வளக்குற திரு விளக்கு மாசம் பத்துல பொறக்கும் புள்ளைக்கு மாலை காத்து இருக்கு

கண்ணே என் கண்ணே உன் கன்னத்தில் செவ்வானமா பெண்ணே செம்பொன்னே அது தாய்மையின் வண்ணமா

வாசல் வந்த வெண்ணிலா இனி வளர் பிறையாகுமே நம் ஆசை என்னும் கோலமே ஒரு பிள்ளை தோன்றுமே

நீயும் நானும் தாயும் தந்தை ஆகும் காலமே