Kanneerai Thudaippen |
---|
பாடலாசிரியர் : வாலி
கண்ணீரைத் துடைப்பேன் பொற்காலத்தை அமைப்பேன் கண்ணீரைத் துடைப்பேன் பொற்காலத்தை அமைப்பேன்
காவல் நானிருப்பேன் என் கண் போலே நினைப்பேன் காவல் நானிருப்பேன் என் கண் போலே நினைப்பேன்
கண்ணீரைத் துடைப்பேன் பொற்காலத்தை அமைப்பேன்
இதய சுமைகளை என்னிடம் தா என் மேல் நம்பிக்கை இருக்கிறதா உதய கமலம் போன்றவளே நான் உனக்கென உதித்த கதிரல்லவா
கண்ணீரைத் துடைப்பேன் பொற்காலத்தை அமைப்பேன்
பாய்மரம் கீழே சாய்ந்திடும் வேளை பெருங்காற்றில் அலைமோதும் ஓடம் அக்கரை சேர அக்கறை காட்டும் அன்பே உன் பொன் போன்ற உள்ளம்
பாய்மரம் கீழே சாய்ந்திடும் வேளை பெருங்காற்றில் அலைமோதும் ஓடம் அக்கரை சேர அக்கறை காட்டும் அன்பே உன் பொன் போன்ற உள்ளம்
தென்னைக்கு பக்கம் வந்து தென்றல் கொஞ்சும் நேரம் தென்பட்ட இன்பம் தன்னை தென்னை என்ன கூறும்
தென்னைக்கு பக்கம் வந்து தென்றல் கொஞ்சும் நேரம் தென்பட்ட இன்பம் தன்னை தென்னை என்ன கூறும்
கண்ணீரை மறப்பேன் பொற்காலத்தில் மிதப்பேன்
பள்ளியில் ஏந்தும் புத்தகம் நீயே படிப்பேனே நாள்தோறும் உன்னை சிற்றிடை நூலே மெல்லியதாகும் மெதுவாக புரட்டுங்கள் என்னை
ஆபள்ளியில் ஏந்தும் புத்தகம் நீயே படிப்பேனே நாள்தோறும் உன்னை சிற்றிடை நூலே மெல்லியதாகும் மெதுவாக புரட்டுங்கள் என்னை
அம்மம்மா இன்னும் என்ன வெட்கம் கொண்ட பெண்ணாய் வெட்கங்கள் ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் உண்டு கண்ணா
கண்ணீரை மறப்பேன் பொற்காலத்தில் மிதப்பேன்
காவல் நானிருப்பேன் என் கண் போலே நினைப்பேன்
கண்ணீரை மறப்பேன் பொற்காலத்தில் மிதப்பேன்