Kannunjal |
---|
ஜஸ்டின் பிரபாகரன்
கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள் மனம் மகிழ்ந்தாள் கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள் மனம் மகிழ்ந்தாள்
விண்ணோடு தாவி பறந்தாள் கார்குழல் ஆட கண்ணோடு காதல் கலந்தாள்
பொன்னூஞ்சலில் தவழும் தோரணங்கள் மணக்க நாரணம் கைகள் பாட நாணங்கள் கூட எழ கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்
உள்ளத்திலே வஞ்சம் இல்லா உத்தமம் பெற்ற குமாரி சுற்றும் புழை சூழ நிற்கும் நித்திய சர்வலங்காரி
மாலை சூட்டினாள் மாலை மாற்றினாள் மாலன் மார்பிலே மாமலர் ஆடிட மயில் ஏங்குதே தூ மலர் தூவிட ஆழி வண்ணன் அவன் ஆசை தோள் இணைந்து கோதை வாழ்க
கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள் மனம் மகிழ்ந்தாள் கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்
நாரணம் கைகள் பட நாணங்கள் கூட எழ கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள் மனம் மகிழ்ந்தாள் கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்