Karichaan Kuyile |
---|
கரிச்சான் குயிலே
சிரிச்ச மயிலே
கவுந்தேன் ஆள மடக்கி
ஓடி அவ மாயமாகுறாளே
வெறிச்சா வெயிலே
அடிச்ச புயலே
செவந்தேன் மூளைக்குள்ள
தேடி வந்து
அவ தாளம் போடுறாளே
அசலா அவ எனக்காக
கெடச்சாலே கணக்காக
ஒறக்கம் கலைக்கும் சுகத்த
அவ தானமாக கொடுத்தா
நழுவாத நங்கூரம்
நடு நெஞ்சில் வெதச்சாளே
தனியா முழுசா
அவதான் அரசாளுறா
அடி பார்வையாள ஈட்டியாக
பாத்து மெரட்டுறியே
பழகாத போதை ஊட்டி
நீயும் ஆள மயக்குறியே
அடி காரமாக கூரு போட்டு
காதல் கொடுக்குறியே
அடி ஆழம் போயி ஆற போடும்
மருந்தா இனிக்குறியே
அடியே
ஹேய் கட்டாத காளை போல
நான் கம்பீரமாதான் போக
என் கண்ணால மோதி
என்னை நீ சாய்கிற
ஹேய் சொல்லாத ஆசை தூங்க
நான் செல்லாத காசா ஏங்க
தினம் உன்னோட ஓசை
கேட்டு கேட்டு முழிக்கிறேன்
பாலம் போட்டு நானும்தான்
பரிமாற பாக்குறேன்
வெடி போட்டு ஒடச்சாயே
காலை மாலை தோனல
கனநேரம் தூங்கல
கலைச்சாயே கனவே
திரை போட்டு நீயும்
தேட தேட
ஓடி ஒளியிரியே
இரவாக நானும் ஓஞ்சு போக
வெளிச்சம் கொடுக்குறியே
கடிகார முள்ள போல என்னை
வாட்டி சொழட்டுறியே
கடிவாளம் மாட்டி பாதை காட்டி
என்னை என்னை என்னை அழைக்கிற
அடி பார்வையாள ஈட்டியாக
பாத்து மெரட்டுறியே
பழகாத போதை ஊட்டி
நீயும் ஆள மயக்குறியே
அடி காரமாக கூரு போட்டு
காதல் கொடுக்குறியே
அடி ஆழம் போயி ஆற போடும்
மருந்தா இனிக்குறியே
அடியே