Kathal Kondale Payamenna |
---|
ஒரு மாது பிறவேல் ஜெகம் மீதிலே ஒரு முறையேதான் காதல் கொள்வாளே இந்தக் காதலின் நோயில் வாழ்வாளே இந்தக் காதலின் நோயில் மரிப்பாளே
காதல் கொண்டாலே பயமென்ன உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன காதல் கொண்டேன் யாதும் பாவம் செய்தில்லை காதல் கொண்டேன் காதல் கொண்டேன் யாதும் பாவம் செய்தில்லை விதி எதிர்த்தாலும் பயமென்ன உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன காதல் கொண்டாலே பயமென்ன உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன
இன்றென் நெஞ்சத்தின் கதையைச் சொல்வேனே என் ஆவி நீதி வேண்டில் ஈவேனே இன்றென் நெஞ்சத்தின் கதையைச் சொல்வேனே என் ஆவி நீதி வேண்டில் ஈவேனே அன்பர் கண் முன்னே காதல் காதல் அன்பர் கண் முன்னே காதல் காதல் அஞ்சி அஞ்சியே சாதல் என்ன உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன காதல் கொண்டாலே பயமென்ன உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன
நெஞ்சில் அவர் தன் நினைவேதான் பாடும் கண்ணில் அவர் தன் கனவேதான் ஆடும் நெஞ்சில் அவர் தன் நினைவேதான் பாடும் கண்ணில் அவர் தன் கனவேதான் ஆடும் காதலே வாழ்வே காதலே சாவே காதலே வாழ்வே காதலே சாவே காதல் இன்றேல் கதி வேறென்ன உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன காதல் கொண்டாலே பயமென்ன உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன
அணையாது எந்தன் காதலின் தீபம் ஆகாயம் எங்கும் காதலர் ரூபம் அணையாது எந்தன் காதலின் தீபம் ஆகாயம் எங்கும் காதலர் ரூபம்
மர்மத் திரையில்லை அல்லா முன்னாலே மர்மத் திரையில்லை அல்லா முன்னாலே மனிதர்கள் முன்னால் திரையென்ன உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன காதல் கொண்டாலே பயமென்ன உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன
காதல் கொண்டேன் யாதும் பாவம் செய்தில்லை விதி எதிர்த்தாலும் பயமென்ன உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன