Kattana Muthu Muthuchirippu

Kattana Muthu Muthuchirippu Song Lyrics In English

கட்டான முத்து முத்துச் சிரிப்பு என் கண்மணிக்கு தெய்வம் தந்த நடிப்பு பொட்டோடு பூ விரித்த விரிப்பு இது பொன்னோடு வைரத்தின் மதிப்பு

கட்டான முத்து முத்துச் சிரிப்பு என் கண்மணிக்கு தெய்வம் தந்த நடிப்பு

மாமதுரை மீனாள் மணிச்சங்கம் எடுத்து தேனுடன் பால் கொடுத்தாளோ மாமதுரை மீனாள் மணிச்சங்கம் எடுத்து தேனுடன் பால் கொடுத்தாளோ

என் வண்ணக்கிளி பேசித் துள்ளி விளையாட வண்ணக்கிளி பேசித் துள்ளி விளையாட வார்த்தைகள் இவள் கொடுத்தாளோ

கட்டான முத்து முத்துச் சிரிப்பு என் கண்மணிக்கு தெய்வம் தந்த நடிப்பு பொட்டோடு பூ விரித்த விரிப்பு இது பொன்னோடு வைரத்தின் மதிப்பு

காஞ்சியை ஆளும் காமாட்சியம்மை கலைகளை அனுப்பி வைத்தாளோ அந்த காசி விசாலாட்சி அருகினில் வந்து கால்நடை பயில வைத்தாளோ

கட்டான முத்து முத்துச் சிரிப்பு என் கண்மணிக்கு தெய்வம் தந்த நடிப்பு பொட்டோடு பூ விரித்த விரிப்பு இது பொன்னோடு வைரத்தின் மதிப்பு

பூவாடை வீச புது மலர் போலே புறப்படு பள்ளிக்கு மகளே உன் பாவாடையோடு பழகிய தமிழின் பாவாடை வீசட்டும் மலரே தமிழின் பாவாடை வீசட்டும் மலரே