Kinnathil Theneduthu |
---|
பாடலாசிரியர் : கண்ணதாசன்
கிண்ணத்தில் தேனெடுத்து எண்ணத்தால் மூடி வைத்தேன் என்னவோ இறைவனுக்கு என்னிடத்தில் கருணை இல்லை
கிண்ணத்தில் தேனெடுத்து எண்ணத்தால் மூடி வைத்தேன் என்னவோ இறைவனுக்கு என்னிடத்தில் கருணை இல்லை
ஆரிரோ ஆராரிரோஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோஆராரோ
ஒற்றையடிப் பாதையிலே பச்சைக்கிளி பறக்க விட்டேன் ஒற்றையடிப் பாதையிலே பச்சைக்கிளி பறக்க விட்டேன் மிச்சமுள்ள பைங்கிளியும் கட்டறுந்து தவிக்க விட்டேன் இச்சையுடன் பாடுவதை என் கிளிக்கு தூது விட்டேன் என் கிளிக்கு தூது விட்டேன்
கிண்ணத்தில் தேனெடுத்து
முற்றத்து வெண்ணிலவே பெற்ற மகன் கண்ணுறங்க முற்றத்து வெண்ணிலவே பெற்ற மகன் கண்ணுறங்க சற்று நீ தாலாட்டு தாய் வடிவில் நீ இருந்து என்னை நீ பார்த்த பின்பும் சொல்லவோ வார்த்தையில்லை
தந்தைக்கோ ஓர் இரவு தாயார்க்கு முன்னூறு தந்தைக்கோ ஓர் இரவு தாயார்க்கு முன்னூறு முன்னூறும் கண்ட கண்கள் கண்ணீரில் வாடுதம்மா கண்ணீரில் படகு விட்டு பிள்ளையிடம் ஓடுதம்மா பிள்ளையிடம் ஓடுதம்மா
கிண்ணத்தில் தேனெடுத்து எண்ணத்தால் மூடி வைத்தேன் என்னவோ இறைவனுக்கு என்னிடத்தில் கருணை இல்லை
ஆரிரோ ஆராரிரோஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ