Kunguma Poove

Kunguma Poove Song Lyrics In English


சிவக்க சிவக்க பட்டு சேலை
சிரிக்க சிரிக்க நிக்குதே
ஜொலிக்க ஜொலிக்க மனமாலை
மனசு சேத்து வைக்குதே

குங்கும பூவே
மஞ்சள் நிலாவே
காதலின் கனவே திருமண உறவே

மொட்டுவிட்ட மனசுக்குள் ஓ
உல்லாச வெடி வெடிச்சாச்சு
பஞ்சவர்ண குயிலுக்கு ஓ
அந்த வானவில்லும் கெடச்சாச்சு

இதம் ஒரு கையில்
சுகம் ஒரு கையில்
நடுவிலே தங்கை உள்ளத்தில்
பேரானந்தம்

பிரிவொரு கண்ணில்
உறவொரு கண்ணில்
இரண்டிலும் அண்ணன்
நெஞ்சம்தான் மெல்ல தடுமாறும்

மொட்டுவிட்ட மனசுக்குள் ஓ
உல்லாச வெடி வெடிச்சாச்சு
பஞ்சவர்ண குயிலுக்கு ஓ
அந்த வானவில்லும் கெடச்சாச்சு

சிவக்க சிவக்க பட்டு சேலை
சிரிக்க சிரிக்க நிக்குதே ஹேய்
ஜொலிக்க ஜொலிக்க மனமாலை
மனசு சேத்து வைக்குதே
ஹேய் ஹேய் ஹேய்

ஊஊ ஊஊ
ஊஊ ஊஊ ஊஊ

தெய்வங்கள் வாழ்த்துமே
உன்னைதான் இன்றைக்கு
சொந்தங்கள் சூழவே
சென்றாய் மேடைக்கு

அண்ணன்தான் ஆசையாய்
செய்த பொன் சிலையே
மாங்கல்யம் சூடினால்
நீயும் தேவதையே

நாளை நீ வேறொரு இல்லத்தில்
சேவைகள் செய்யும் நேரத்தில்
எத்தனை இன்ப சுமைகள்
தோன்றும் நெஞ்சத்தில்


கார்த்திகை தீபம் மனமாக
மார்கழி கோலம் முகமாக
நீ ஒரு இல்ல தரசி
ஆகும் நாளாகஓ ஹோ

குங்கும பூவே
மஞ்சள் நிலாவே
காதலின் கனவே திருமண உறவே

மொட்டுவிட்ட மனசுக்குள் ஓ
உல்லாச வெடி வெடிச்சாச்சு
பஞ்சவர்ண குயிலுக்கு ஓ
அந்த வானவில்லும் கெடச்சாச்சு

பாசத்தின் மழையிலே
நனைந்தாய் இந்தனை நாள்
முத்தத்தின் கலையிலே
நனையும் திருமண நாள்

ஆசைகள் ஆடையை
தாண்டி வரும் நேரம்
ஆண்மகனில் பார்வைகள்
உன்னை தொடும் நேரம்

சிவக்க சிவக்க பட்டு சேலை
சிரிக்க சிரிக்க நிக்குதே
ஜொலிக்க ஜொலிக்க மனமாலை
மனசு சேத்து வைக்குதே

நாளை உன் வயிற்றில் பூ பூக்கும்
அதுவும் ஒரு ஆணாய் இருந்தாலே
மாமனின் மடியில்
தூங்கி மகனாய் வாழாதா

அண்ணனின் மகளும் வந்தாலே
அத்தையும் உன் மகனை கேட்டாலே
இன்னொரு ஜென்மத்துக்கும்
சொந்தம் தோன்றாதா ஓ ஹோ

குங்கும பூவே
மஞ்சள் நிலாவே
காதலின் கனவே திருமண உறவே

மொட்டுவிட்ட மனசுக்குள் ஓ
உல்லாச வெடி வெடிச்சாச்சு
பஞ்சவர்ண குயிலுக்கு ஓ
அந்த வானவில்லும் கெடச்சாச்சு

Tags