Kuthuvilakkaga Kulamagalaga

Kuthuvilakkaga Kulamagalaga Song Lyrics In English


குத்துவிளக்காக குலமகளாக நீ வந்த நேரம் நான் பாடும் ராகம் நீ வந்த நேரம் நான் பாடும் ராகம் என் வானிலேநீ வெண்ணிலா நட்சத்திரம் உன் கண்ணிலா

ஒளி சிந்த வந்த தேரே என் உள்ளம் தன்னில் ஓடும் தேனே

குத்துவிளக்காக குலமகளாக நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்

பல வண்ணப் பூக்கள் பாடுது பாக்கள் அது ஏன் தேன் சிந்துது அது நீ பூ எங்குது

பூவிலொரு வண்டு போதை ஒன்று கொண்டு அது ஏன் திண்டாடுது போதைதான் பண்பாடுது

சோலைக்கொரு வசந்தம் போல் நீ வந்தாய் காளைக்கென்றும் சொந்தம் என்று நீ ஆனாய்

நீ நேசம் தர அதில் நான் பாசம் பெற


குத்துவிளக்காக குலமகளாக உன் நெஞ்சின் ஓரம் எனை ஏற்ற நேரம்

ரகசிய கனவு வந்த இன்ப இரவு ஏன் நம்மை வாட்டுது அது ஏன் சூடேற்றுது பொட்டு வைத்த நிலவு புத்தம் புது உறவு இன்று ஏன் தடுமாறுது சுகம்தான் பரிமாறுது

பௌர்ணமி முற்றத்திலே வெளிச்சம்தான் பைங்கிளி முத்தம் பெற கூச்சம்தான் நானும் மெல்ல அள்ள நாணம் உன்னை கிள்ள

குத்துவிளக்காக குலமகளாக உன் நெஞ்சின் ஓரம் எனை ஏற்ற நேரம் என் வானிலேநீ வெண்ணிலா நட்சத்திரம் உன் கண்ணிலா உனக்கென பிறந்தேனே உன் தோளில் என்றும் தவழ்வேனே

குத்துவிளக்காக குலமகளாக நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்