Maadi Veettu Koondukili

Maadi Veettu Koondukili Song Lyrics In English

மாடி வீட்டு கூண்டுக்கிளி ஏழை வீட்டு முற்றத்திலே இறங்கி வந்து பாடுதம்மா காதல் தந்த பித்தத்திலே

மாடி வீட்டு கூண்டுக்கிளி ஏழை வீட்டு முற்றத்திலே இறங்கி வந்து பாடுதம்மா காதல் தந்த பித்தத்திலே

மாலையிட்ட ஜோடிக்கிளி மயக்கத்தோடு மஞ்சத்திலே தாளம் போட துடிக்குதம்மா பெண் கிளியின் நெஞ்சத்திலே

மாடி வீட்டு கூண்டுக்கிளி ஏழை வீட்டு முற்றத்திலே இறங்கி வந்து பாடுதம்மா காதல் தந்த பித்தத்திலே

கத்துக் கொள்ளும்போது துன்பம் இருக்கும் துன்பங்களில் நூறு இன்பம் இருக்கும் மெல்ல மெல்ல நாணம் ஓடி ஒளியும் பின்னிக் கொள்ள தேகம் தேடி அலையும்

வேர்வையின் சங்கீதம் இன்று ஆனந்த ஆரம்பம் பெண்ணுடல் எங்கெங்கும் இந்த மன்மதன் ராஜாங்கம் அணைக்கும்போது எரியும் நெருப்பு அணைக்க அணைக்க அணைய மறுக்கும்

மாடி வீட்டு கூண்டுக்கிளி ஏழை வீட்டு முற்றத்திலே இறங்கி வந்து பாடுதம்மா காதல் தந்த பித்தத்திலே

பச்சைக்கிளி மெல்ல பந்தி விரிக்கும் மிச்சமின்றி தேனை அள்ளிக் கொடுக்கும் இச்சக்கிளி கைகள் எங்கும் நடக்கும் மச்சங்களை தேடிக் கண்டு பிடிக்கும்

மெத்தையின் வித்தைகளில் புது கட்டிலும் திண்டாடும் சங்கம சண்டைகளில் அவள் கைவளை துண்டாகும் விடியும் நேரம் மலரும்போது உடையை தேடி விழிகள் ஓடும்

மாடி வீட்டு கூண்டுக்கிளி ஏழை வீட்டு முற்றத்திலே இறங்கி வந்து பாடுதம்மா காதல் தந்த பித்தத்திலே

மாலையிட்ட ஜோடிக்கிளி மயக்கத்தோடு மஞ்சத்திலே தாளம் போட துடிக்குதம்மா பெண் கிளியின் நெஞ்சத்திலே ஆஆஆஹ்ஹ்ஹஆஆஅஹ்ஹ்ஹ்ஹ ம்ம்ம்ம்ம்ம்ஆஆஅஹ்ஹ்ஓஹ்ஹஹோ