Mama Manasila |
---|
பாடலாசிரியர் : தஞ்சை கல்யாணசுந்தரம்
மாமா மனசில ஒளிஞ்சிருக்குது ரகசியம் அத புரிஞ்சிக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம் எங்க மாமா மனசில ஒளிஞ்சிருக்குது ரகசியம் அத புரிஞ்சிக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம்
அக்கம் பக்கம் திரும்பி திரும்பி பாக்குது அட ஆந்தை முழியில் ஏதோ ஏதோ கேக்குது அக்கம் பக்கம் திரும்பி திரும்பி பாக்குது அட ஆந்தை முழியில் ஏதோ ஏதோ கேக்குது
இங்கே பாரு அக்கா கையை சேக்குது நான் அருகில் வந்தால் அசடு முகம் வேர்க்குது இங்கே பாரு அக்கா கையை சேக்குது நான் அருகில் வந்தால் அசடு முகம் வேர்க்குது
மாமா மனசில ஒளிஞ்சிருக்குது ரகசியம் அத புரிஞ்சிக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம்
அங்கே போ இங்கே போ அத வாங்கு இத வாங்கு
அர்த்தமில்லாமல் வேல எதுக்கு கொடுக்கணும் என்னை அடிக்கடி ஏன் வெளியே வெளியே அனுப்பணும் என் முத்து என் கண்ணு என் ராணி என் ராஜாத்தி அப்பிடின்னு
பட்டாளத்து மாமா எதுக்கு கெஞ்சணும் எனக்கு பயந்துகிட்டு அக்காவை ஏன் கொஞ்சணும் பட்டாளத்து மாமா எதுக்கு கெஞ்சணும் எனக்கு பயந்துகிட்டு அக்காவை ஏன் கொஞ்சணும்
எங்க மாமா மனசில ஒளிஞ்சிருக்குது ரகசியம் அத புரிஞ்சிக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம்
ஆளில்லாதபோது சிரிப்பு சத்தம் கேக்குது அம்மா அப்பா வெளையாட்டெல்லாம் ஜோரா நடக்குது ஆளில்லாதபோது சிரிப்பு சத்தம் கேக்குது அம்மா அப்பா வெளையாட்டெல்லாம் ஜோரா நடக்குது
தேனே மானே என்றே தினம் வசனம் பேசுது நான் திரும்பி வந்தா திருடன் போலே பயந்து நடுங்குது தேனே மானே என்றே தினம் வசனம் பேசுது நான் திரும்பி வந்தா திருடன் போலே பயந்து நடுங்குது
எங்க மாமா மனசில ஒளிஞ்சிருக்குது ரகசியம் அத புரிஞ்சிக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம்