Manasukkulle Maraichu Vaikka |
---|
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எம் எல் வசந்தகுமாரி
இசை அமைப்பாளர் : ஆர் சுதர்சனம்
பாடல் ஆசிரியர் : எம் கே அத்மநாதன்
ஹாஆஆஆஆஆஆஅ
ஹாஆஆஆஆஆஆஅ
மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே
நெனப்பு வந்தா எனக்கு ஒண்ணும் புரியலே நெனப்பு வந்தா எனக்கு ஒண்ணும் புரியலே கொஞ்ச நேரங்கூடப் பிரிஞ்சிருக்க முடியலே கொஞ்ச நேரங்கூடப் பிரிஞ்சிருக்க முடியலே
மனசுக்குள்ளே மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே
பாத்திக்கெல்லாம் நேர்த்தியாய் நீரிறைக்கும் மாமா பாத்திக்கெல்லாம் நேர்த்தியாய் நீரிறைக்கும் மாமா பாவை என்னை பம்பரம்போல் ஆட்டி வைக்கலாமா பாவை என்னை பம்பரம்போல் ஆட்டி வைக்கலாமா
மாத்தறியாத் தங்கமே மனசைத் தொட்டுப் பாரு மாத்தறியாத் தங்கமே மனசைத் தொட்டுப் பாரு என் மனசைத் தொட்டுப் பாரு வாட்டி வதை செய்கிறது நீயா நானா கூறு வாட்டி வதை செய்கிறது நீயா நானா கூறு
மனசுக்குள்ளே மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே
பிஞ்சுப் பருவத்திலே கொஞ்சிக் கொஞ்சிப் பேசியதை நெஞ்சம் மறக்குதில்லை கண்ணாளா உங்கள நெனச்சுக்கிட்டே காத்திருக்கேன் இந்நாளா
கனியிருக்குது கொம்பிலே கிளியிருக்குது கூண்டிலே கனியிருக்குது கொம்பிலே கிளியிருக்குது கூண்டிலே கலந்து வாழ இப்போ வழியில்லே கலந்து வாழ இப்போ வழியில்லே ஆனாலும் கட்டுக்கடங்கா ஆசையிருக்கு மனசிலே கட்டுக்கடங்கா ஆசையிருக்கு மனசிலே
மனசுக்குள்ளே மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே