Manidha Innum Yenindha |
---|
தேவனின் கோயிலில் ஏற்றிய தீபம் தெருவினில் கிடக்குது இது என்ன ஞாயம்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
மனிதா இன்னும் ஏனிந்த கேள்வி தூவும் மழையிலும் எரியுது வேள்வி வீரர்கள் சாவிலும் பெறுவது வாழ்வு கோழைகள் வாழ்வினில் தினம் தினம் சாவு
துணிந்தவன் விழிகளில் தெரிகின்ற வீரம் துடித்தெழும் நாளில் சரித்திரம் மாறும் மனிதா இன்னும் ஏனிந்த கேள்வி தூவும் மழையிலும் எரியுது வேள்வி
புயலே புயலே இன்னும் கண்ணீர் சிந்தாதே கண்ணீர் சிந்தாதே இனியும் அழுதால் எங்கள் நெஞ்சம் தாங்காதே நெஞ்சம் தாங்காதே உயரும் கைகள் எல்லாம் ஒன்றாய் சேரட்டும் ஒன்றாய் சேரட்டும் அடிமை இல்லை என்னும் ராகம் பாடட்டும் ராகம் பாடட்டும்
நீதியின் கண்கள் இரண்டையும் திருப்பு நீருக்குள் உறங்கும் நெருப்பையும் எழுப்பு மனிதா இன்னும் ஏனிந்த கேள்வி தூவும் மழையிலும் எரியுது வேள்வி
தலைகள் உருளும் பொழுது தர்மம் தாங்காது தர்மம் தாங்காது தடைகள் உடையும் வரையில் உண்மை தூங்காது உண்மை தூங்காது விதியும் சதியும் எங்கள் உணர்வை கொல்லாது உணர்வை கொல்லாது விடியும் வரையில் எங்கள் பயணம் நில்லாது பயணம் நில்லாது
காலனின் வீட்டுக்கு கடிதங்கள் எழுது கயவர்கள் வாழ்வது நீதிக்கு பழுது அனைவரும் : வீரர்கள் சாவிலும் பெறுவது வாழ்வு கோழைகள் வாழ்வினில் தினம் தினம் சாவு
அனைவரும் : துணிந்தவன் விழிகளில் தெரிகின்ற வீரம் துடித்தெழும் நாளில் சரித்திரம் மாறும் துடித்தெழும் நாளில் சரித்திரம் மாறும்