Mannavan Oorvalamo |
---|
பாடலாசிரியர் : வாலி
மன்னவன் ஊர்வலமோ தாய் மனமெனும் தேர் வருமோ பொன் மகள் சீதனமோ உன் புன்னகை மோகனமோ வான் நிலவோ விண்மீன்களின் நயனங்களோ தேன் மலரோ மணமேடையின் நளினங்களோ
மன்னவன் ஊர்வலமோ தாய் மனமெனும் தேர் வருமோ பொன் மகள் சீதனமோ உன் புன்னகை மோகனமோ
காவிரியோ காவியமோ காலத்தின் கோலங்களோ காவிரியோ காவியமோ காலத்தின் கோலங்களோ மார்கழி மாதமோ மல்லிகை வாசமோ வசந்தமே வந்ததோ
மன்னவன் ஊர்வலமோ தாய் மனமெனும் தேர் வருமோ பொன் மகள் சீதனமோ உன் புன்னகை மோகனமோ வான் நிலவோ விண்மீன்களின் நயனங்களோ தேன் மலரோ மணமேடையின் நளினங்களோ
மன்னவன் ஊர்வலமோ தாய் மனமெனும் தேர் வருமோ பொன் மகள் சீதனமோ உன் புன்னகை மோகனமோ
பூங்குயிலோ பொன் எழிலோ தென்றலின் ஆலாபனை பூங்குயிலோ பொன் எழிலோ தென்றலின் ஆலாபனை ஆனந்த ராகமோ அன்பெனும் தீபமோ தெய்வமே தந்ததோ