Mannavaru Chinnavaru

Mannavaru Chinnavaru Song Lyrics In English


மன்னவரு சின்னவரு மனசுக்கேத்த நல்லவரு மனசார வாழ்த்தி பாடுங்கடி ஆண் மற்றும் எங்க மன்னவர மனசார வாழ்த்தி பாடுங்கடி

மன்னவரு சின்னவரு மனசுக்கேத்த நல்லவரு மனசார வாழ்த்தி பாடுங்கடி பெண் மற்றும் எங்க சின்னவர மனசார வாழ்த்தி பாடுங்கடி

கல்வி கண்ண தொறந்தவரு ஏடறியா மன்னவரு ஆண் மற்றும் எங்கள் குல நாயகரு ஏழைகளின் காவலரு அவர் வழி நடந்திடுவார் மன்னவரின் சின்னவரு பெண் மற்றும் வானம் பார்க்க வந்தவரு வாழ்வின் வழி நின்றவரு

ஊருக்காக உண்மையாக உழைத்திடும் உத்தமரு நாட்டுக்காக நன்மை செய்ய நாளும் உழைக்கும் நல்லவரு

ஆண் மற்றும் மன்னவரு சின்னவரு மனசுக்கேத்த நல்லவரு மனசார வாழ்த்தி பாடுங்கடி எங்க மன்னவர மனசார வாழ்த்தி பாடுங்கடி

பெண் மற்றும் எங்க சின்னவர மனசார வாழ்த்தி பாடுங்கடி

அன்பு நெறி தவறாத ஆலயம்தான் மன்னவரு ஆண் மற்றும் ஈர மனம் உள்ளவரு ஈகை குணம் கொண்டவரு குலப் பெருமை காக்க வந்த சோமகண்டன் சின்னவரு பெண் மற்றும் கொல்லிமல பாவலரு வசதியா வாழ்ந்தவரு


தனிமனித ஒழுக்கத்தின் தத்துவமாம் மன்னவரு தந்தை சொல்லே மந்திரமென வாழ்ந்து வரும் சின்னவரு

ஆண் மற்றும் மன்னவரு சின்னவரு மனசுக்கேத்த நல்லவரு மனசார வாழ்த்தி பாடுங்கடி எங்க மன்னவர மனசார வாழ்த்தி பாடுங்கடி

பெண் மற்றும் மன்னவரு சின்னவரு மனசுக்கேத்த நல்லவரு மனசார வாழ்த்தி பாடுங்கடி எங்க சின்னவர மனசார வாழ்த்தி பாடுங்கடி

அனைவரும் : எங்க மன்னவர மனசார வாழ்த்தி பாடுங்கடி