Meen Kodi Theril (Female)

Meen Kodi Theril (Female) Song Lyrics In English

பாடகி : ஜென்சி அந்தோணி

பாடலாசிரியர் : எம் ஜி வல்லபன்

மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்

ரதியோ பதியின் அருகே முகமோ மதியின் அழகே உறவின் சுகமே இரவே தருமே காதலர் தேவனின் பூஜை நாளில்

பௌர்ணமி ராவில் இளம் கன்னியர் மேனி காதல் ராகம் பாடியே ஆடவர் நாடும் அந்த பார்வையில்தானோ காமன் ஏவும் பாணமோ நானே உனதானேன் நாளும் சுபவேளைதானே

மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்

காலையில் தோழி நக கோலமும் தேடி காண நாணம் கூடுதே மங்கல மேளம் சுக சங்கம கீதம் காமன் கோவில் பூஜையில் நானே உனதானேன் நாளும் சுபவேளைதானே

மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்

ரதியோ பதியின் அருகே முகமோ மதியின் அழகே உறவின் சுகமே இரவே தருமே காதலர் தேவனின் பூஜை நாளில்

மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் லால்ல லாலாலால்ல லாலலால்ல லா லா